பெட்ரோலிய இருப்பு போதுமான அளவு உள்ளது: இந்தியா
மும்பை:
போர் ஏற்பட்டால் அதை சமாளிக்கும் வகையில் இந்தியாவின் பெட்ரோலிய கையிருப்பு போதுமான அளவில்இருப்பதாக பெட்ரோலிய அமைச்சர் ராம் நாயக் கூறியுள்ளார்.
எண்ணெய் கிடங்குகள், எண்ணெய் சுத்திகரிப்பு மையங்கள், சமையல் எரிவாயு கிடங்குகள் ஆகியவைபாகிஸ்தானின் தாக்குதலுக்கு உள்ளாகலாம். இதையடுத்து இவற்றுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுஎன்றார்.
போர்க் காலத்தில் எண்ணெய் இருப்பு மிக முக்கியம். ஆயுதங்களுக்கும், வாகனங்களுக்கும் பெட்ரோல், டீசல்,விமானப் பெட்ரோல், நாப்தா, கிரீஸ் தேவை. நமக்கு இந்த வகையில் எந்தப் பிரச்சனையும் வராது. போதியஅளவில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
கார்கில் போரின்போது காஷ்மீரில் ஒரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தாக்கப்பட்டது. இதனால் லே பகுதியில்இன்னொரு மையம் அமைக்கப்பட்டுவிட்டது. இங்கு விமானங்களுக்கும் எரிபொருள் நிரப்ப முடியும். இந்தப்பகுதியை பாகிஸ்தானால் தாக்க முடியாது என்றார்.
கடற்பகுதியில் இந்திய எண்ணெய் கப்பல்களுக்கும் பெட்ரோலிய கிணறுகளுக்கும் போதிய பாதுகாப்புத் தரப்படும்என்றார் நாயக்.
மிக் விமானங்கள் தயார்:
அதே போல கடந்த சில வாரங்களாக தொடர்ந்து விபத்துக்குள்ளானதால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மிக்-21 பிஸ்,மிக்-29 ரக விமானங்கள் மீண்டும் தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளன.
தரையிறக்கப்பட்ட இந்த ரக விமானங்களை மீண்டும் பயிற்சியில் ஈடுபடுத்தவும், தாக்குதலுக்குத் தயார் செய்யவும்இந்திய விமானப் படைக்கு பாதுகாப்பு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
நம்மிடம் இந்த வகைகளைச் சேர்ந்த 125 விமானங்கள் உள்ளன. எதிரி நாட்டு விமானங்களை தடுத்து நிறுத்தும்முக்கிய விமானங்கள் இவை. அத்தோடு தாக்குதலுக்கும் இவற்றைப் பயன்படுத்த முடியும்.
ஹிஸ்புல்-முஜாகிதீன் மிரட்டல்:
இதற்கிடையே பாகிஸ்தானை மிரட்டி வரும் இந்தியாவைத் தாக்குவோம் என ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாதஅமைப்பு கூறியுள்ளது.
பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் பல பகுதிகளை நாங்கள் தான் கட்டுப்படுத்தி வருகிறோம்.இதனால் அங்கு தாக்குதல் நடத்தினால் இந்தியப் படைகள் முதலில் எங்களைத் தான் எதிர்கொள்ள வேண்டி வரும்என்று அந்த அமைப்பு கூறியுள்ளது.
இதன்மூலம் தீவிரவாதிகளின் சொர்க்கலோகமே பாகிஸ்தான் தான் என்பது மீண்டும் ஒருமுறைநிரூபணமாகியுள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications