ராஜஸ்தான் எல்லையில் இந்தியா போர் பயிற்சி
டெல்லி:
ராஜஸ்தானில் பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகானீர் பகுதியில் இந்திய ராணுவமும் விமானப் படையும் போர்பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.
மிக்-21, மிக்-29 ரக போர் விமானங்களும் இந்தப் போர் பயிற்சியில் ஈடுபடுத்தப்பட்டன. நேற்றிரவு முழுவதும்இந்தப் பயிற்சி நடந்தது. இதை பாதுகாப்பு அமைச்சர் பெர்னாண்டஸ், ராணுவத் தளபதி பத்மநாபன், விமானப்படைத் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.
ஆப்ரேஷன் பராக்கிரம்-3 என்ற பெயரிடப்பட்ட இந்தப் பயிற்சி தொடர் போர் பயிற்சிகளில் ஒன்றாகும். ஆனால்,இப்போது எல்லையில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலில் இந்தப் பயிற்சி நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பயிற்சி கடந்த வாரமே தொடங்கிவிட்டது.
இதற்கிடையே ராஜஸ்தான் எல்லையில் குண்டு வீச்சு போர் விமானங்களான ஜாகுவார் விமானங்களும், புதிதாகராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ள டி-90 ரக டாங்கிகளும் குவிக்கப்பட்டு வருகின்றன.
ஜாகுவார் விமானங்கள் மிக அதிக எடை கொண்ட குண்டுகளையும், லேசர் ரக குண்டுகளை வீசும் திறன்கொண்டவை. குறைந்த உயரத்தில் பறக்கும் இந்த விமானங்கள் எளிதில் ரேடார்களின் கண்ணில் இருந்து தப்பிஎதிரி நாட்டுக்குள் நீண்ட தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை.
பிரிட்டின் வடிவமைத்த இந்த ரக விமானங்களை இப்போது இந்தியாவே தயாரித்து வருகிறது.
அதே போல காலியாக இருந்து மேற்குப் பிராந்திய விமானப் படைத் தலைவர் பதவி நிரப்பப்பட்டுள்ளது. ஏர்மார்ஷல் ஏ.ஆர். காந்தி இந்தப் பதவியில் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தப் பிராந்திய விமானப் படை தான்பாகிஸ்தானை சமாளிக்க வேண்டிய முக்கிய படையாகும்.
இந் நிலையில் அமெரிக்காவிடம் இருந்து துப்பாக்கிகளைக் கண்டறியும் நவீன ரேடார்கள், பி3சி ரக உளவுவிமானஙகள், கமாண்டோ தாக்குதலுக்கு உதவும் தொலைத் தொடர்பு கருவிகளை விரைவில் வாங்கவும் இந்தியாதிட்டமிட்டுள்ளது. இதற்காக இந்திய பாதுகாப்புத்துறை செயலாளர் யோகேந்திர நாராயண் அமெரிக்காசென்றுள்ளார்.
ஜெர்மனி ஆதரவு:
இந் நிலையில் இந்தியா மீதான கொலைவெறித் தாக்குதல்களை உடனே நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறுபாகிஸ்தானுக்கு ஜெர்மனி காட்டமாகக் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான பதற்றம் குறித்து கவலை அடைந்துள்ளதாகவும், இந்த விவகாரத்தில் சமரசமுயற்சியில் ஈடுபடப் போவதாகவும் அமெரிக்கா அறிவித்துள்ளது.
இரு நாடுகளும் அமைதியைக் கடைபிடிக்க வேண்டும் ஐ.நா. பொதுச் செயலாளர் கோபி அன்னான் கோரிக்கைவிடுத்துள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications