வாணியம்பாடியில் கருணாநிதி பிரச்சாரம்
வாணியம்பாடி:
வாணியம்பாடி தொகுதி திமுக வேட்பாளரான நாகூர் ஹனீபாவை ஆதரித்து அக்கட்சியின் தலைவரான கருணாநிதிஇன்று தன்னுடைய 2 நாள் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
வரும் 31ம் தேதி சைதாப்பேட்டை மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளிலும் இடைத் தேர்தல்நடைபெறவுள்ளதையடுத்து மூன்று இடங்களிலும் தேர்தல் பிரச்சாரம் களை கட்டத் தொடங்கிவிட்டது.
கடந்த 18ம் தேதி முதல் வாணியம்பாடியில் தமிழக முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதாதன் கட்சி வேட்பாளரான வடிவேலுவை ஆதரித்து அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
இந்நிலையில் இன்று மாலை 5 மணிக்கு கருணாநிதி இத்தொகுதியில் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
இதற்காக இன்று காலை சென்னையிலிருந்து கிளம்பிய கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
இடைத் தேர்தல் பாதுகாப்பாகவும் சுமூகமாகவும் நடைபெறுவதற்காக மத்தியப் படைகளை அனுப்ப வேண்டும்என்று திமுக பொதுச் செயலாளரான அன்பழகன் தலைமை தேர்தல் கமிஷனைக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தேர்தல் கமிஷன் இதுவரை இதற்குப் பதிலளிக்கவில்லை.
சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் திமுகவும் அச்சிறுப்பாக்கம் தொகுதியில் பாமகவும் வெற்றிபெறும் என்ற நம்பிக்கையோடு தான் பிரச்சாரத்திற்குச் செல்கிறேன் என்றார் கருணாநிதி.
கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் வழியனுப்பி வைக்க, முன்னாள் அமைச்சரும் தமிழக சட்டசபை திமுகதுணைத் தலைவருமான துரை முருகன், சென்னை மாநகர மேயர் ஸ்டாலின், முன்னாள் அமைச்சர்கள் ஆற்காடுவீராசாமி மற்றும் பொன்முடி ஆகியோர் கருணாநிதி கிளம்பும் போது உடனிருந்தனர்.
வாணியம்பாடி தொகுதிக்குட்பட்ட கலந்திராவில் இன்று மாலை 5 மணிக்குப் பிரச்சாரத்தைத் தொடங்கியகருணாநிதி தொடர்ந்து வேப்பம்பட்டு, முல்லை, நிம்மியம்பட்டு ஆகிய ஊர்களிலும் பிரச்சாரம் செய்கிறார். பின்னர்இரவு 7 மணிக்கு ஆலங்காயத்தில் நடைபெறும் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார்.
அதன் பிறகு 8 மணிக்கு வெள்ளக்குட்டையில் பிரச்சாரம் செய்துவிட்டு, 9 மணிக்கு ஆம்பூர் பொதுக் கூட்டத்தில்பேசுகிறார்.
இதைத் தொடர்ந்து நாளை மாலை மீண்டும் பிரச்சாரத்தைத் தொடங்கும் கருணாநிதி, பல்வேறு கிராமங்களில்பிரச்சாரத்தை முடித்து விட்டு கடைசியாக வாணியம்பாடியில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.அத்துடன் அவர் தன்னுடைய பிரச்சாரத்தை முடித்துக் கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து அச்சிறுப்பாக்கத்தில் பாமக வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து 25ம் தேதியும்,சைதாப்பேட்டை திமுக வேட்பாளர் மா. சுப்பிரமணியத்தை ஆதரித்து 27 மற்றும் 28ம் தேதியும் கருணாநிதி அந்தத்தொகுதிகளில் பிரச்சாரம் செய்யவுள்ளார்.
பாட்டுப் பாடி ஓட்டு சேகரிக்கும் ஹனீபா:
இதற்கிடையே வாணியம்பாடியில் தன்னுடைய கணீர் குரலால் பாட்டுக்களைப் பாடியே ஓட்டுக்களைச் சேகரித்துக்கொண்டிருக்கிறார் ஹனீபா.
தன்னுடைய பிரச்சார வேனில் அனைத்து இசைக் கலைஞர்களையும் உட்கார வைத்துக் கொண்டு "யாருக்கய்யாஉங்க ஓட்டு? யாருக்கம்மா உங்க ஓட்டு" என்று தன்னுடைய வெண்கலக் குரலால் பாடி மக்களை மகிழ்விப்பதோடுநில்லாமல் திமுக தொண்டர்களையும் உற்சாகப்படுத்தி வருகிறார்.
ஹனீபாவின் பாடல்களைக் கேட்பதற்காகக் கூடும் கூட்டத்தைப் பார்த்து மகிழ்ந்து போன திமுக தொண்டர்களிடம்"மக்கள் பாட்டை மட்டும் தான் கேட்பார்கள். ஓட்டுப் போட மாட்டார்கள்" என்று அதிமுகவினர் கூறவே, திமுகவினர்மிகவும் கடுப்பாகிப் போனார்கள்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications