தூத்துக்குடி-கொழும்பு இடையே விரைவில் கப்பல் போக்குவரத்து
கொழும்பு:
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதற்கான ஒப்பந்தம்விரைவில் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவுக்கும், குறிப்பாக, தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையே கப்பல் போக்குவரத்து சில ஆண்டுகளுக்குமுன் நிறுத்தப்பட்டது.
தற்போது இலங்கையில் அமைதிப் பேச்சு விரைவில் துவங்கவுள்ள சூழ்நிலையில் இரு நாடுகளுக்குமிடையேமீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றுதெரிகிறது.
இது தொடர்பாக இந்தியா மற்றும் இலங்கையில் கப்பல் அமைச்சரக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். மேலும், இது தொடர்பாக, இந்திய கப்பல் போக்குவரத்து அமைச்சரக அதிகாரியுடன் இலங்கைகப்பல் போக்குவரத்து செயலாளர் பெரேரோ பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.
இதற்கான இறுதிகட்ட பேச்சுவார்த்தை நடத்த இலங்கை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வரும் 23ம் தேதி இந்தியாவரவுள்ளார். இந்தியாவில் ஐந்து நாட்கள் தங்கியிருக்கும் போதே இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும்என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
முதலில் தூத்துக்குடிக்கும் கொழும்புக்கும் இடையே கப்பல் போக்குவரத்து தொடங்கும். அதன் பின்புசென்னைக்கும் கொழும்புக்கும் இடையே உல்லாசக் கப்பல் போக்குவரத்து தொடங்குவது பற்றி விவாதிக்கப்படும்.ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் ராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையே கப்பல் போக்குவரத்துதொடங்குவது சாத்தியமில்லை என்று பெரரோ கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications