இது தான் கடைசி வாய்ப்பு: புலிகள் எச்சரிக்கை
கொழும்பு:
அமைதி முயற்சிகளுக்கு இது தான் கடைசி வாய்ப்பு. இதைப் பயன்படுத்திக் கொள்ளத் தவறினால் மீண்டும் போர்ஏற்படுவதைத் தவிர்க்கவே முடியாது என்று விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுத் தலைவரான எஸ். கரிகாலன்இலங்கை அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள செங்கலாடியில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தின் போது கரிகாலன் இதைத்தெரிவித்தார்.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்து அதனால் வரும் போரினால் மோசமான விளைவுகளை இலங்கை அரசு சந்திக்கநேரிடும். எங்களுடைய உரிமைகளுக்காக நாங்கள் மேற்கொள்ளும் அந்தப் போர் மிகவும் கடுமையானதாகஇருக்கும் என்றும் அவர் கூறினார்.
புலிகள் இயக்கத்தில் தற்போது 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் சேர்த்துக் கொள்ளப்பட்டு வருகின்றனர். அரசியல்பணிகளைக் கவனிப்பதற்காகவே அவர்கள் பெரும்பாலும் ஈடுபடுத்தப்படுகின்றனர் என்று கூறிய கரிகாலன்,இதற்காக ஒவ்வொரு தமிழ்க் குடும்பமும் ஒவ்வொருவரை அனுப்ப வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
ஏற்கனவே பெரும்பாலான குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை எங்கள் இயக்கத்தில் சேர்ப்பதில் ஆர்வம்கொண்டுள்ளதாகவும் கரிகாலன் கூறினார்.
கொழும்பு தேர்தலில் ரணில் கட்சி வெற்றி:
இதற்கிடையே கொழும்பு முனிசிபல் தேர்தலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கிய தேசிய கட்சி அபாரவெற்றி பெற்றது.
17 இடங்களுக்கு நடந்த இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள்கூட்டணிக் கட்சி வெற்றி பெற்றுள்ளது.
இலங்கையில் அமைதி திரும்புவதற்காக ரணில் எடுத்து வரும் முயற்சிகளுக்கு இலங்கை மக்கள் அளித்து வரும்ஆதரவையே அவருடைய இந்த வெற்றி தெளிவாக எடுத்துக் காட்டுகிறது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பலத்த அடி வாங்கிய சந்திரிகா, அமைதி முயற்சிகளைத்தொடர்ந்து எதிர்த்து வந்ததன் மூலம் இந்த முனிசிபல் தேர்தலிலும் பலத்த தோல்வியடைந்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications