முக்கோணக் காதல்: மாணவர் எரித்துக் கொலை
சென்னை:
ஒரு பெண்ணைக் காதலிப்பதில் ஏற்பட்ட தகராறில் சென்னையைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கத்தியால் குத்தியும்,தீயில் எரித்தும் பயங்கரமாகக் கொலை செய்யப்பட்டார்.
சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் ஒரு தனியார் கல்லூரி உள்ளது. இதில் பி.காம். படித்து வந்தார் பிரபு. அவரது சகமாணவர் ராஜேஷ். இருவரும் கல்லூரியின் பிரபல விளையாட்டு வீரர்கள்.
விளையாட்டு தொடர்பாக இருவருக்கும் அவ்வப்போது உரசல் ஏற்படும். இந்த நிலையில், ராஜேஷுக்கும் ஒருபெண்ணுக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. அதே பெண்ணை பிரபுவும் ஒருதலையாக காதலித்து வந்தார்.
சமீபத்தில் அந்தப் பெண்ணிடம் பிரபு ஏதோ கூறியுள்ளார். இதை அந்தப் பெண் ராஜேஷிடம் கூறவேஆத்திரமடைந்த அவர், பிரபுவைத் தீர்த்துக் கட்ட முடிவு செய்தார்.
தினசரி பிரபு ஜிம்முக்கு செல்வது வழக்கம். இதை நன்கு அறிந்துள்ள ராஜேஷ் ஜிம்முக்கு பிரபு வரும் போதுஅவரைக் கொன்று விட முடிவு செய்தார்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) காலை வழக்கம் போல் பிரபு ஜிம்முக்கு போனார். அப்போது நந்தம்பாக்கம்டிபென்ஸ் காலனி அருகே அவரை ராஜேசும் அவருடைய இரண்டு நண்பர்களும் வழிமறித்தனர்.
பின்னர் பிரபுவை அவர்கள் சரமாரியாகத் தாக்கினர். அப்போது ராஜேஷ் கும்பலில் இருந்த ஒருவன் பிரபுவைத்தீடிரென்று கத்தியால் குத்தினான். மற்றொருவன் கழுத்தை நெரித்துள்ளான். இதில் நிலை குலைந்த பிரபு கீழேவிழுந்தார்.
அப்போது பிரவு மீது திடீரென்று மண்ணெண்ணையை ஊற்றிய அக்கும்பல் அவருடைய உடம்பில் தீவைத்து விட்டுஅங்கிருந்து தப்பியோடி விட்டது. இதனால் பிரபு உடல் கருகி உயிரிழந்தார்.
இவர்களுக்கிடையே சண்டை நடந்தபோது, ஏதோ மாணவர்களுக்குள் சண்டை நடக்கிறது போலும் என்று அந்தப்பகுதி வழியே சென்ற சிலர் நினைத்துக் கொண்டு போய்விட்டனர்.
இதற்கிடையே ஜிம்முக்குப் போன தங்களது மகனைக் காணவில்லையே என்று பயந்த பிரபுவின் பெற்றோர்தேடியபோது தான் இந்த பயங்கர கொலைச் சம்பவமே தெரிய வந்தது.
கொலைக்குக் காரணமான முக்கியக் குற்றவாளி ராஜேஷை போலீசார் தீவிரமாகத் தேடி கைது செய்து விட்டனர்.மற்ற இருவரையும் தேடி வருகிறார்கள்.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications