பெரம்பலூர்: வாந்தி, பேதிக்கு ஒருவர் பலி - பலர் அவதி
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாழும் மக்கள் கடந்த சில நாட்களாகவேவாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவஸ்தைப் படுகின்றனர். இதில் ஒருவர் உயிரிழந்தார்.
சில நாட்களுக்கு முன் பெரம்பலூரில் உள்ள அனுகூர் என்னும் கிராமத்தில் வாழும் மக்களில் 30க்கும் மேற்பட்டோர்திடீரென்று வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் அவஸ்தைப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களில் வெங்கடாசலம் என்பவர் சிகிச்சை பலனளிக்காமல் சமீபத்தில் இறந்தார்.
மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களும் இன்று வரை வாந்தி, பேதியால் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருகின்றனர்.
தண்ணீர் பிரச்சினையால் தான் இந்த வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை ஏற்படும் என்று கூறும் மருத்துவர்கள் ,நன்கு காய்ச்சி வடிகட்டிய நீரை மட்டுமே மக்கள் குடிக்க வேண்டும் என்று அறுவுறுத்தியும் வருகின்றனர்.












Click it and Unblock the Notifications