பிளஸ் டூ முடிவுகளில் குளறுபடியா? - தேர்வுத்துறை அலுவலகத்தில் மாணவர்கள் முற்றுகை
சென்னை:
கடந்த 17ஆம் தேதி வெளியிடப்பட்ட பிளஸ் டூ தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் இருப்பதாகக் கூறிமாணவர்களும் அவர்களுடைய பெற்றோர்களும் சென்னையில் உள்ள தேர்வு அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
கடந்த 17ஆம் தேதி தேர்வு முடிவுகள் அவசர அவசரமாக வெளியிடப்பட்டன. மதிப்பெண் பட்டியல்கள்பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பப்படாத போதிலும், மாணவர்களின் மதிப்பெண்கள் மட்டும் பள்ளிகளுக்குஅனுப்பப்பட்டன.
அவ்வாறு பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட பட்டியலில் சில மாணவர்களின் எண்கள் தேர்ச்சி பெற்றவர்களின்பட்டியலில் இல்லை. ஆனால் மதிப்பெண்களைப் பார்க்கும் போது தான் தாங்கள் தேர்ச்சி அடைந்திருப்பதேஅம்மாணவர்களுக்குத் தெரிய வந்தது.
சில மாணவர்களின் எண்களோ தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியலில் இருந்தது. ஆனால் அவர்களுடையமதிப்பெண் குறித்த விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
இவ்வாறு பல குளறுபடிகள் இருந்தது. இதையடுத்து மாணவர்கள் தங்கள் பள்ளி நிர்வாகத்தை அணுகினர். ஆனால்அவர்களோ தங்களால் ஒன்றும் செய்ய இயலாது என கைவிரிக்கவே மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன்நேற்று காலை தேர்வுத் துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அதிகாரிகளிடம் மதிப்பெண்கள் வெளியிட்டதில் உள்ள குளறுபடிகளை தெரிவித்தனர். அதற்கு பதிலளித்தஅதிகாரிகள் சில பிரச்சினைகள் காரணமாக சில மாணவர்களின் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைத்திருப்பதாகவும்இன்னும் சில நாட்களில் அவை வெளியிடப்படும் என்றும் உறுதியளித்து பெற்றோர்களையும் மாணவர்களையும்சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
இதற்கிடையே தேர்வு துறை இயக்குனரகத்தைச் சேர்ந்த ஒரு அதிகாரி இது குறித்து கூறியதாவது:
மாணவர்கள் சிலர் தங்களது பதிவு எண்ணை தவறாக எழுதியுள்ளனர். சிலருடைய பதிவு எண் ஹால் டிக்கெட்டில்தவறாக குறிப்பிடப்பட்டுள்ளது. சில பள்ளிகளில் இருந்து செய்முறைத் தேர்வு மதிப்பெணகள் வந்து சேரவில்லை.இவ்வாறு பல பிரச்சினைகள் உள்ளன.
பதிவு எண் தவறாக உள்ள மாணவர்களின் தேர்வுத்தாள்களை அவர்களின் கையெழுத்தின்படி ஒன்று சேர்த்துமதிப்பெண் கணக்கிடத் திட்டமிட்டுள்ளோம். மேலும் செய்முறைத் தேர்வு மதிப்பெண் வராத பள்ளிகளைதொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவர்களின் மதிப்பெண்களை வாங்கவும் திட்டமிட்டுள்ளோம். அதனால்தேர்வு முடிவு வராத மாணவர்கள் கவலைப்பட வேண்டாம்.
இவ்வாறு 760 மாணவர்களின் தேர்வு முடிவுகள் நிறுத்தி வைக்க்ப்பட்டுள்ளன. இவர்களின் தேர்வு முடிவுகளைவெளியிட இரவு-பகலாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
மதிப்பெண் பட்டியலில் மதிப்பெண்கள் சரியாக இருக்கும் என்று உறுதியாக நம்பலாம். மதிப்பெண் பட்டியல் வரும்23ம் தேதி எல்லா பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிப்பவர்கள் மதிப்பெண் பட்டியலின் நகலை சமர்பிக்க வேண்டிய கட்டாயம் இல்லை.அவர்களுக்கு அனுப்பப்பட்ட மதிப்பெண்களை கொண்டே அவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறினார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications