நடு ரோட்டில் "குட்டிக்கரணம்": போலீசாருக்கு ஐ.ஜி. கொடுத்த நூதன தண்டனை
பாண்டிச்சேரி:
ஹெல்மட் அணியாத 4 பாண்டிச்சேரி போலீசார் நடுரோட்டில் குட்டிக்கரணம் போட வேண்டும் என்ற நூதனதண்டனை அளிக்கப்பட்டது.
பாண்டிச்சேரியில் உள்ள போலீசார் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது கட்டாயம் ஹெல்மட் அணிந்திருக்கவேண்டும் என்று அம்மாநில ஐ.ஜி. சிங் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் நேற்று (திங்கள்கிழமை) காலை வில்லியனூர் போலீஸ் நிலையத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்றபோலீஸ்காரர் தலையில் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரி நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அப்போது தற்செயலாக எதிர்த் திசையில் ஒரு ஜீப்பில் வந்து கொண்டிருந்த சிங்கின் கண்ணில் ஹெல்மட்அணியாமல் வந்து கொண்டிருந்த கோவிந்தராஜ் பட்டு விட்டார்.
இதையடுத்து பாண்டிச்சேரி நீதிமன்றம் அருகே கோவிந்தராஜை வருமாறு கூறினார் சிங். கோவிந்தராஜ் அங்குவந்து சேர்ந்ததும் அவர் ஹெல்மட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் சென்றதற்காக சிங் அவரைக் கடுமையாகத்திட்டினார்.
அத்துடன் நில்லாமல் இதற்குத் தண்டனையாக கோவிந்தராஜ் நடுரோட்டில் குட்டிக்கரணம் போட வேண்டும்என்றும் சிங் கூறினார். உடனே கோவிந்தராஜும் நடுரோட்டில் குட்டிக்கரணம் போட்டார்.
இதே போல் சந்திரமோகன், முருகையன் மற்றும் ஆரோக்கியநாதன் ஆகியோரும் சிங்கின் பார்வையில் பல்வேறுஇடங்களில் மாட்டிக் கொண்டனர்.
அவர்களுக்கெல்லாம் ஸ்பாட்டிலேயே நடு ரோட்டில் குட்டிக்கரண தண்டனை கொடுத்தார் சிங். ஒவ்வொருபோலீஸ்காரரும் இதற்காக 10 முறை நடு ரோட்டில் குட்டிக்கரணம் போட்டனர்.
நடுரோட்டிலேயே போலீசாருக்கு வழங்கப்பட்ட இந்தக் குட்டிக்கரண தண்டனை, பாண்டிச்சேரி போலீசாரிடம்மட்டுமில்லாமல் அம்மாநில மக்களிடையேயும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்போதெல்லாம் மோட்டார் சைக்கிளில் செல்லும் பாண்டிச்சேரி போலீசார் ஹெல்மட் அணிந்து கொண்டு தான்செல்கின்றனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications