பிரபாகரனின் பெற்றோர் இலங்கை திரும்ப விருப்பம்
திருச்சி:
இலங்கையில் அமைதி திரும்புவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதால் தாங்கள் நாடு திரும்ப விரும்புவதாகவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகனின் பெற்றோர் கூறியுள்ளனர்.
பிரபாகரனின் தந்தை வேலுப்பிள்ளை, தாயார் பார்வதி அம்மையார் ஆகியோர் கடந்த 1990ம் ஆண்டில் இந்தியாவந்தனர். இவர்கள் திருச்சியில் இருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள முசிறியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
முதலில் இவர்கள் திருச்சியில் தாங்கியிருந்தனர். ஆனால், வயதான இவர்களுக்கு நோய்வாய்ப்பட்டதால் நாட்டுவைத்திய சிகிச்சை பெற்று வருகின்றனர். அதற்கு வசதியாக முசிறிக்கு இடம் பெயர்ந்தனர்.
தொடர்ந்து இந்தியாவில் தங்கியிருக்க கடந்த 1999ம் ஆண்டில் இவர்கள் மாநில அரசிடம் முறைப்படிவிண்ணப்பித்து அனுமதி பெற்றுள்ளனர்.
பிரபாகரனின் பெற்றோர் என்ற வகையில் இவர்கள் எந்தவிதமான விவகாரங்களிலும் சிக்கியதில்லை. மிகஅமைதியான முறையில் வாழ்ந்து வருகின்றனர். இவர்களை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தான் சிலமுறைசந்தித்துள்ளார்.
இந் நிலையில் இருவருமே யாழ்பாணத்துக்குத் திரும்ப ஆர்வம் காட்டியுள்ளனர். இது தொடர்பாக திருச்சிகாவல்துறை தலைமையகத்தை நாடியுள்ளனர். தமிழகத்தில் அகதிகளாகக் குடியேறிய தாங்களை நாடு திரும்பஅனுமதிக்குமாறும், அதற்குரிய அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை எடுக்குமாறும் கோரியுள்ளதாகத் தெரிகிறது.
ஆனால், இவர்கள் தற்போது முசிறியில் தங்கியிருப்பதால் அந்த ஊர் காவல் நிலையம் மூலமாகத் தான் அரசைத்தொடர்பு கொள்ள வேண்டும் என திருச்சி காவல்துறை கூறியுள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து முசிறி காவல் நிலையத்தில் வேலுப்பிள்ளையும் பார்வதி அம்மையாரும் கோரிக்கைக் கடிதத்தைசமர்பிப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இவர்களைப் போலவே திருச்சி மற்றும் சுற்றுப் பகுதிகளில் வசித்து வரும் மேலும் பல இலங்கைத் தமிழர்களும் நாடுதிரும்ப ஆர்வம் காட்டி வருகின்றனர். இது தொடர்பாக காவல்துறைக்கு கடிதங்களை எழுதியுள்ளனர்.
இதையடுத்து இதற்குத் தேவையான விண்ணப்பங்களை இந்திய வெளியுறவுத்துறை, தமிழக அரசின் அகதிகள்மறுவாழ்வுத்துறை ஆகியவற்றிடம் இருந்து பெற்றுத் தரும் பணியில் காவல்துறை இறங்கியுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் மட்டும் 6,000 புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர்கள் வசித்து வருகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications