ஜனாதிபதி தேர்தல்: கிருஷ்ண காந்த் போட்டி?
டெல்லி:
இந்தியாவின் அடுத்த ஜனாதிபதிக்காக நடக்கவுள்ள தேர்தலில் துணை ஜனாதிபதியான கிருஷ்ணகாந்த்தும்போட்டியிடவுள்ளதாகக் கூறப்படுகிறது.
வரும் ஜூலை 24ம் தேதியுடன் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனின் பதவிக் காலம் முடிவடைகிறது. அதற்கு முன்பேஅடுத்த ஜனாதிபதிக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதையடுத்து ஜனாதிபதி வேட்பாளருக்காகப் பலருடைய பெயர்களும் அடிபட்டு வருகின்றனர். இதற்காக பிரதமர்வாஜ்பாய் ஏற்கனவே அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் பேச்சு நடத்த ஆரம்பித்து விட்டார்.
முன்னாள் தமிழக ஆளுநரும் தற்போதைய மகாராஷ்டிர ஆளுநருமான பி.சி. அலெக்சாண்டரை வாஜ்பாய் மற்றும்காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வேட்பாளராக நிறுத்தப் போவதாகத் தகவல்கள்வெளியாகின.
முன்னாள் ஐ.எப்.எஸ். அதிகாரியான அவர், இந்தியாவின் அமெரிக்கத் தூதராகவும் முன்னாள் பிரதமர்இந்திராகாந்தியின் அந்தரங்க செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
ஆனால் அலெக்சாண்டரை வேட்பாளராக நிறுத்துவது குறித்து அதிகாரப்பூர்வமாக எந்தச் செய்தியும்வெளியாகவில்லை. வாஜ்பாயும் தொடர்ந்து எதிர்க் கட்சிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.
நாராயணனே தொடர்ந்து ஜனாதிபதியான நீடிக்கலாம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூறியபோதிலும்,அனைத்துக் கட்சிகளும் ஒருமித்த கருத்துடன் ஜனாதிபதி வேட்பாளரைத் தேர்வு செய்ய வேண்டும் என்றுவாஜ்பாயிடம் அக்கட்சி வலியுறுத்தியது.
ஆனால் நாராயணன் ஜனாதிபதியாகத் தொடர்ந்து நீடிப்பதை வாஜ்பாய் விரும்பவில்லை என்று தோன்றுகிறது.
இதற்கிடையே பிரதமரின் முன்னாள் அறிவியல் ஆலோசகரும் அணு விஞ்ஞானியுமான அப்துல் கலாம், கர்நாடகமாநில முன்னாள் முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டே, முன்னாள் பிரதமர் சந்திர சேகர் உள்பட பலருடையபெயர்களும் ஜனாதிபதி தேர்தலுக்காக அடிபடுகின்றன.
இந்நிலையில் கிருஷ்ணகாந்த்தும் ஜனாதிபதி பதவிக்காகப் போட்டியிடவுள்ளார் என்று தற்போது தகவல்கள்வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதற்காக அவர் முதற்கட்டமாக தெலுங்கு தேசம் கட்சியின் ஆதரவை நாடியுள்ளதாகவும் தெரிகிறது.
சமீபத்தில் ஹைதராபாத்துக்குச் சென்ற கிருஷ்ணகாந்த், தெலுங்கு தேசம் கட்சித் தலைவரான சந்திரபாபு நாயுடுஉள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து இதுகுறித்து விவாதித்ததாகவும் கூறப்படுகிறது.
இவ்வாறு பல முனைகளிலிருந்தும் ஜனாதிபதிக்குப் போட்டியிட தலைவர்கள் புறப்பட்டுள்ளதையடுத்து, ஜனாதிபதிதேர்தல் நல்ல சூடு பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications