இன்று ராஜிவ் நினைவு நாள்: ஸ்ரீபெரும்புதூரில் அஞ்சலி
ஸ்ரீபெரும்புதூர்:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் 11வது நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுவதையடுத்து,ஸ்ரீபெரும்புதூரில் இன்று காங்கிரஸ் மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தினர்.
கடந்த 1991ம் ஆண்டு மே 21ம் தேதி தான் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த தேர்தல் பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்ட போது, மனித வெடிகுண்டு வெடித்து ராஜிவ் உடல் சிதறிப் பலியானார்.
ராஜிவ் நினைவு நாளையொட்டி அவர் இறந்த இடத்தில் எழுப்பப்பட்டுள்ள நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர்இளங்கோவன், முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் வாழப்பாடி ராமமூர்த்தி மற்றும் தங்கபாலு மற்றும் தமாகாதலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் இன்று சென்று மலரஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அனைவரும் பயங்கரவாத உறுதி மொழி எடுத்துக் கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர்அருணாசலம் உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் இந்த அஞ்சலி நிகழ்ச்சியில்பங்கேற்றனர்.
விடுதலைப்புலிகளின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனை இந்தியாவுக்குப் பிடித்துக் கொண்டு வரவேண்டும் என்று தமிழக அரசு சரியான நேரத்தில் தான் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்ற வாழப்பாடிராமமூர்த்தி, அவரைப் பிடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ளாவிட்டால் அதைஎதிர்த்துப் போராட்டம் நடத்துவோம் என்றார்.
பின்னர் பெங்களூரிலிருந்து கொண்டு வரப்பட்ட "ராஜிவ் ஜோதி"யை இளங்கோவன் பெற்றுக் கொண்டார். ராஜிவ்நினைவு நாளையொட்டி அங்கு பல்வேறு மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டன.
இதற்கிடையே சென்னையில் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமான பன்னீர்செல்வம்தலைமையில் அமைச்சர்கள் பயங்கரவாத எதிர்ப்பு உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
அதேபோல் தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கலெக்டர் தலைமையில் பயங்கரவாத உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
டெல்லியில் சோனியா அஞ்சலி:
இதற்கிடையே டெல்லியில் ராஜிவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார் அவருடைய மனைவியும் காங்கிரஸ்தலைவருமான சோனியா காந்தி.
ராஜிவ் நினைவு நாளையொட்டி "சத்பவானா பேரணி"யிலும் சோனியா கலந்து கொண்டார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications