காஷ்மீரில் முக்கிய அரசியல் தலைவர் சுட்டுக் கொலை
ஸ்ரீநகர்:
ஹூரியத் கான்பரன்ஸ் அமைப்பின் முக்கியத் தலைவரான அப்துல் கானி லோனை ஸ்ரீநகரில் நேற்று மாலைதீவிரவாதிகள் சுட்டுக் கொன்றனர்.
ஜம்மு-காஷ்மீர் அவாமி கமிட்டி சார்பாக நடந்த ஒரு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு வந்ததீவிரவாதிகள் கிரினேட் குண்டுகளைச் சராமாரியாக வீசினர்.
பின்னர் துப்பாக்கிகளால் கண்மூடித்தனமாக அவர்கள் லோனைச் சுட்டனர். இதில் லோன் சம்பவ இடத்திலேயேரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
காஷ்மீரின் பல்வேறு அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பு ஹூரியத் கான்பரன்ஸ் அமைப்பு. இதில்தீவரவாத்தை ஆதரிப்பவர்களும் உண்டு மிதவாதத்தை ஆதரிப்பவர்களும் உண்டு.
அப்துல் கனி லோன் தீவிரவாதத்தை எதிர்த்து வந்த தலைவராவார். இந்தியாவுடன் பேச்சு மூலமே பிரச்சனைகளைத்தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறி வந்தவர்.
இதனால் தான் அவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றுள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்தக் கொலைக்கு பாகிஸ்தான் தான் காரணம் என்று காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா கூறியுள்ளார்.பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அமைப்பு தான் தனது தந்தையைக் கொன்றுள்ளதாக லோனின் மகன் சாஜித் குற்றம்சாட்டியுள்ளார்.
காஷ்மீரில் பிரதமர் வாஜ்பாய் இருக்கும நிலையில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. காஷ்மீரில் வரும் அக்டோபரில்நடக்கவுள்ள தேர்தலில் அப்துல் கனி லோன் போட்டியிடவும் திட்டமிட்டிருந்தார். இதனால் காஷ்மீரில் அரசியல்தீர்வு ஏற்பட முக்கியத் தலைவராக அவர் விளங்கி வந்தார்.
லோனின் மறைவுக்கு பிரதமர் வாஜ்பாய் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். அவரது மகன் சாஜித்துடன் வாஜ்பாய்தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார் வாஜ்பாய்.
அப்துல் கனி லோனின் மறைவு காஷ்மீர் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தி அவர்களைக் கொன்று குவித்து வந்ததீவிரவாதிகள் தற்போது அரசியல் கட்சிகள் மீதும் தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications