கர்நாடகாவில் தமிழக தொழிலதிபர் படுகொலை
சிக்மகளூர்:
தமிழகத்தைச் சேர்ந்த குணசேகரன் என்ற வியாபாரி கர்நாடகாவில் உள்ள சிக்மகளூரில் கயிற்றால் கழுத்தைநெறித்து படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
காபித் தோட்டம் வாங்குவதற்காக கர்நாடகாவிற்கு வந்த குணசேகரன் ஹாசனில் ஒருவரையும் சிக்மகளூரில் 2பேரையும் சந்தித்துள்ளார்.
பின்னர் சிக்மகளூரில் உள்ள ஒரு லாட்ஜில் அவர் தங்கியிருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் குணசேகரன் இருந்த அறைக் கதவு திறக்கப்படாமலிருக்கவே,சந்தேகமடைந்த விடுதி உரிமையாளர் அதைத் தட்டிப் பார்த்தார். தொடர்ந்து திறக்கப்படாமல் இருக்கவேபோலீசாருக்குத் தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த போலீசார் குணசேகரன் இருந்த அறையின் கதவு உடைத்துத் திறந்தனர். அந்த அறையில் உள்ளகுளியலறையில் கயிற்றால் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் குணசேகரன் பிணமாகக் கிடந்தார்.
முதலில் குணசேகரன் சிங்கப்பூரைச் சேர்ந்தவர் என்று போலீசார் கூறினார். பின்னர் அவர் தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்றனர். சிங்கப்பூரில் அவருக்கு தொழில்ரீதியிலான தொடர்புகள் இருக்கலாம் என்று தெரிகிறது.
தமிழகத்தில் இவர் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்த விவரம் தெரியவில்லை. இவருக்கு 35 வயதிருக்கும்.
இவரது பணம், நகைகள் ஏதும் கொள்ளை போகவில்லை என்று தெரிகிறது. இந்தக் கொலை குறித்து போலீசார்தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications