ஸ்டாலின்: எம்.எல்.ஏவா? மேயரா?
சென்னை:
சமீபத்தில் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட "ஒருவருக்கு ஒரு பதவி" சட்டத்துக்கு ஆளுநர் பி.எஸ்.ராமமோகன் ராவ் ஒப்புதல் வழங்கி விட்டார்.
சென்னை மாநகர மேயரும் எம்.எல்.ஏவுமான மு.க. ஸ்டாலினின் ஏதாவது ஒரு பதவியைப் பறிக்கும் பொருட்டுகடந்த 10ம் தேதி தமிழக சட்டசபையில் இந்தச் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
முன் தேதியிட்டு நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டசத்தை கடுமையாக எதிர்த்த திமுக மற்றும் பாமக போன்ற எதிர்க்கட்சிகள், இதற்கு ஒப்புதல் அளிக்கக் கூடாது என்று ராமமோகன் ராவிடமும் ஜனாதிபதி கே.ஆர். நாராயணனிடமும்மனு கொடுத்தனர்.
"ஒருவருக்கு ஒரு பதவி" என்ற சட்டம் சரி தான். ஆனால் அதைக் கொண்டு வந்துள்ள நோக்கம் தவறானது என்றுகாங்கிரஸ், தமாகா, கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகளும் இந்தச் சட்டத்தைக்கடுமையாக எதிர்த்தன.
இந்நிலையில் இந்தச் சட்டத்திற்கு ராமமோகன் ராவ் ஒப்புதல் அளித்து விட்டார். ஊட்டியில் தற்போதுமுகாமிட்டுள்ள அவர் இந்தச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இதையடுத்து விரைவில் தமிழக அரசிதழில்இந்தச் சட்டம் வெளியாகி விடும்.
அரசிதழில் வெளியான 15 நாட்களுக்குள் எம்.எல்.ஏ. அல்லது மேயர் ஆகிய இரண்டு பதவிகளில் ஏதாவது ஒன்றைராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் ஸ்டாலின் உள்ளார்.












Click it and Unblock the Notifications