கோட்டையில் மீண்டும் ஒரு தற்கொலை முயற்சி
சென்னை:
சென்னைத் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்தில் தற்கொலை முயற்சிகள்அதிகரித்து வருகின்றன. லேட்டஸ்ட்டாக இந்த ஆண்டின் 8வது தற்கொலை முயற்சி நேற்று (திங்கள்கிழமை)நடந்தது.
தமிழக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்ற பின்னர் தான் இந்தத் தற்கொலை முயற்சிகள் அதிகரித்துள்ளன.காரணம், ஜெயலலிதாவை சந்தித்து மனு கொடுத்து விட்டால் கண்டிப்பாக பலன் இருக்கும் என்ற எண்ணம் மக்கள்மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இதனால் மனு கொடுப்பதற்காக தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் சென்னையிலிருந்து மட்டுமில்லாமல்தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்தும் சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்துக்கு வருகிறார்கள்.
ஆனால் அத்தனை பேரும் ஜெயலலிதாவை சந்திக்க முடிவதில்லை. இதனால் ஏமாற்றத்திற்கு உள்ளாகும் சிலர்தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் 7 பேர் தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஒரு தம்பதியர் உயிரிழந்தனர். கோயம்புத்தூரைச்சேர்ந்த அந்த தம்பதியின் குடும்பத்துக்கு உதவிய முதல்வர் ஜெயலலிதா, இதுபோன்ற சம்பவங்கள் நடக்காதவாறுபார்த்துக் கொள்ளுமாறு போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
ஆனால் அதையும் மீறி அவ்வப்போது தற்கொலை முயற்சிகளும், மிரட்டல்களும் நடக்கத்தான் செய்கின்றன.
இந்நிலையில் திங்கள்கிழமை திருநெல்வேலியைச் சேர்ந்த அந்தோணியம்மாள் என்ற பெண் கோட்டைக்கு வந்தார்.சுத்தமல்லி பகுதியைச் சேர்ந்த அவர் அங்குள்ள சப்-இன்ஸ்பெக்டர் தன்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு வேலைவாங்கித் தருவதாக கூறி மோசடி செய்து விட்டதாகவும், அரசு தலையிட்டு தனக்கு நிவாரணம் தர வேண்டும் என்றுகோரி ஜெயலலிதாவிடம் மனு கொடுக்க வந்திருந்தார்.
ஆனால் அவரால் ஜெயலலிதாவைப் பார்க்க முடியவில்லை. இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்துவிட்டார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்குசிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 5ம் தேதி முதியவர் ஒருவர் விஷம் குடித்தார். பின்னர் அவர் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டு உயிர் பிழைத்தார். அதே மாதம் 27ம் தேதி தான் கோயம்புத்தூரைச் சேர்ந்த நளினி-வேலுதம்பதியர் விஷம் குடித்து நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பரிதாபமாக இறந்தனர்.
ஏப்ரல் 13ம் தேதி சுப்ரமணியன் என்பவர் பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர் அவர் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதிமுகவைச் சேர்ந்த ஒருவர் தன்னிடம் ரூ.2லட்சம் வரை மோசடிசெய்தது தொடர்பாக முதல்வரிடம் மனு கொடுக்க அவர் வந்திருந்தார்.
தொடர்ந்து ஏப்ரல் 29ம் தேதி வைரமுத்து-தமிழ்செல்வி என்ற தம்பதி தங்களது குழந்தைகளுடன் முதல்வரைப்பார்க்க வந்தனர். ஆனால் ஜெயலலிதாவைப் பார்க்க முடியாமல் போகவே கோட்டை வளாகத்தில் அவர்கள்தீக்குளித்துத் தற்கொலை செய்து கொள்ள முயன்றனர். ஆனால் அதற்குள் சுதாரித்த போலீசார் அதைத் தடுத்துவிட்டனர்.
அதே நாளில், 56 வயது ராமபாண்டியன் என்ற திருநெல்வேலி மாவட்டத்துக்காரர் பூச்சி மருந்தைக் குடித்துத்தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
இந்த தற்கொலை முயற்சிகள் தொடர் கதையாகியுள்ளது போலீசாரை பெரும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது.கோட்டை வளாகத்தில் எப்போதும் ஒரு வேன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. யாராவது தற்கொலைக்குமுயன்றால் அவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு ஏற்றிச் செல்வதற்காகவே இந்த வேன்வைக்கப்பட்டுள்ளது.
-
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு!












Click it and Unblock the Notifications