காஷ்மீர் சென்றார் வாஜ்பாய்
டெல்லி:
எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ள நிலையில் பிரதமர் வாஜ்பாய் இன்று மாலை காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகர்சென்று சேர்ந்தார்.
குலுமணாலி சென்று ஒரு வாரம் ஓய்வெடுக்கத் திட்டமிட்டிருந்த வாஜ்பாய், அந்தத் திட்டத்தைக் கைவிட்டு இன்றுமுதல் மூன்று நாள் பயணமாகக் காஷ்மீருக்குச் சென்றுள்ளார்.
இன்று மாலை ஹூரியத் கான்பரன்ஸ் கட்சியின் தலைவரான அப்துல் கானி லோன் சுட்டுக் கொல்லப்பட்டதைவாஜ்பாய் வன்மையாகக் கண்டித்தார்.
கடந்த 14ம் தேதி தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய கலுச்சாக் ராணுவ முகாமிற்குச்சென்று, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் அஞ்சலி செலுத்துகிறார். பின்னர்இந்தச் சம்பவத்தில் காயமடைந்தவர்களையும் நேரில் சந்தித்து வாஜ்பாய் ஆறுதல் கூறுகிறார்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள குப்வாரா மாவட்டத்திற்குச் செல்லும் வாஜ்பாய், அங்குள்ள ராணுவமுகாம்களை நேரில் பார்வையிடுவார். பின்னர் ராணுவ அதிகாரிகளிடம் விவாதிக்க உள்ளார்.
இதற்கிடையே நாளை காலை 9 மணிக்கு ஜம்மூவில் பத்திரிக்கை நிருபர்களை வாஜ்பாய் சந்திக்கும் நிகழ்ச்சிக்கும்ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காஷ்மீருக்குக் கிளம்பும் முன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜீத் மற்றும் சமாஜ்வாடி கட்சித்தலைவர் ஆகியோரைச் சந்தித்த வாஜ்பாய், தற்போதைய எல்லை நிலவரம் குறித்து அவர்களுடன் ஆலோசனைநடத்தினார்.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் ஏ.பி. பரதன் ஆகியோருடன் வாஜ்பாய்ஏற்கனவே ஆலோசனை நடத்தி விட்டார்.
காஷ்மீர் விவகாரத்தில் மத்திய அரசு எடுக்கும் எந்த முயற்சிக்கும் ஆதரவளிப்பதாக சோனியா கூறியுள்ளநிலையில், தூதரக ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளுக்கு தாங்கள் ஆதரவளிப்பதாகவும் தற்போதைய நிலையில்போர் வேண்டாம் என்றும் வாஜ்பாயிடம் பரதன் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் காஷ்மீரில் நிலைமையை ஆராய்ந்த பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்ஸ்,ராணுவத் தளபதி பத்மநாபன், கடற்படைத் தளபதி கிருஷ்ணசாமி ஆகியோர் நேற்று ராஜஸ்தான் எல்லையில்குவிக்கப்பட்டுள்ள இந்தியப் படைகளைப் பார்வையிட்டனர்.
இன்று பிரதமருடன் மீண்டும் காஷ்மீர் சென்றார் பெர்னாண்டஸ். உள்துறை அமைச்சர் அத்வானியும் இவர்களுடன்சென்றுள்ளார். இவர்களைத் தவிர முப்படைத் தளபதிகளும் அங்கு சென்றுள்ளதாகத் தெரிகிறது.
காஷ்மீரில் யூனிபைட் கமாண்ட் எனப்படும் உயர்மட்ட பாதுகாப்புக் கமிட்டிக் கூட்டத்திலும் வாஜ்பாய்பங்கேற்கிறார். இதில் காஷ்மீர் முதல்வர் பரூக் அப்துல்லா, ராணுவத்தின் தாக்குதல் படையான 15 மற்றும் 16வதுகார்ப்ஸ் படைத் தலைவர்களும், ராணுவ உளவுப் பிரிவின் தலைவர்களும் பங்கேற்பர்.
வாஜ்பாயின் வருகையையொட்டி ஜம்மூ முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதிகள்தாக்குதலுக்குத் திட்டமிடலாம் என்பதால் ஆயிரக்கணக்கான படைகள் ஜம்மூவில் குவிக்கப்பட்டுள்ளன.
வாஜ்பாயின் வருகையையொட்டி பந்த் நடத்த சில அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.












Click it and Unblock the Notifications