தமிழின் கனவு நனவாகுமா?
சென்னை:
குடிசையில் குடியிருக்கும் ஒரு ஏழைக் குடும்பம் தனது மூத்த மகளின் எதிர்காலப் படிப்புக்கு யாரும் உதவிக் கரம்நீட்ட மாட்டார்களா என்று ஏங்கி வருகிறது.
தமிழகத்தில் சமீபத்தில் வெளியான பிளஸ் டூ தேர்வு முடிவுகளைப் பார்த்த விஜயலட்சுமிக்கு சந்தோஷம்பீறிட்டெழுந்தது. ஆனால் அடுத்த விநாடியே அதை அப்படியே தனது மனதுக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டார்.
ஏன்? தொடர்ந்து படிக்க வேண்டுமானால் பணம் வேண்டும். ஆனால் சாதாரண பிளம்பரான தனது தந்தையால்தன்னை எப்படிப் படிக்க வைக்க முடியும் என்ற எண்ணமே விஜயலட்சுமியின் சோகத்திற்குக் காரணம்.
சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள குறுகலான லால்பேகம் தெருவின் இடுக்கில் இருக்கும் சின்ன ஒண்டுக்குடித்தன குடிசை வீட்டில் குடியிருக்கிறார் விஜயலட்சுமி. அப்பா மகாதேவன் பிளம்பராக வேலை பார்க்கிறார்.அம்மா ரேணுகா வீடுகளில் வேலை பார்த்து வருகிறார். தங்கை 10வது வகுப்புக்குப் போகிறார், தம்பியும் பள்ளிப்படிப்பில் இருக்கிறார்.
இந்தக் குடும்பத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக ஜொலிப்பவர் விஜயலட்சுமிதான். 12வது வகுப்பில் சிறப்புத் தமிழில்இவர் எடுத்திருப்பது 181 மதிப்பெண்கள். மாநில அளவில் இப்பாடத்தில் முதலிடம் பெற்றுள்ள விஜயலட்சுமியால்பல சிரமங்களுக்கிடையே தான் இந்தச் சாதனையை எட்ட முடிந்துள்ளது.
10க்கு 10 அடி என்ற கணக்கில் உள்ள ஒரு அறை தான் இவர்களது வீடு. அந்த அறைக்குள் தான் ஐந்து பேரும்புழங்கிக் கொள்ள வேண்டும். அறைக்கு வெளியே சமையல் செய்வதற்காக ஒரு குட்டி அறை உள்ளது. இதுதவிரபொதுவான குளியலறை மற்றும் கழிப்பறைகள் உள்ளன.
விஜயலட்சுமி பள்ளியிலிருந்து திரும்பிய பின் மாலையில் மட்டுமே படிக்க முடிந்தது. இரவில் இங்கு மின்சாரம்இல்லை. இதனால் வீட்டுக்கு வெளியே உள்ள தெரு விளக்கொளியில் படிப்பாராம் அவர்.
பரீட்சைக்கான பீஸ் கட்டுவதிலும் கூட இவருக்குப் படு சிரமம் ஏற்பட்டது. கடைசி நாளில்தான் யாரிடமாவதுகைமாத்து வாங்கி வந்து தான் விஜயலட்சுமியிடம் கொடுப்பாராம் அவருடைய அப்பா.
இப்படித் தட்டுத் தடுமாறி பிளஸ் டூ வரை படித்து விட்ட விஜயலட்சுமியின் மேற்படிப்பு கானல் நீராகவேகாட்சியளிக்கிறது. பிளஸ் டூவில் கலைப் பிரிவை எடுத்துள்ள விஜயலட்சுமி பி.ஏ. தமிழ் படிக்க விரும்புகிறார்.எதிர்காலத்தில் சிறந்த ஆசிரியையாக உருவாக வேண்டும் என்ற தீராத ஆசை அவரது மனதில் உள்ளது.
பி.ஏ. படிப்பிற்கான விண்ணப்பத்தையும் வாங்கி விட்டார். ஆனால் தொடர்ந்து படிக்க வேண்டுமானால் கையில்பணம் இல்லை. இதனால் வழி தெரியாமல் திகைத்து நிற்கிறார். தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து உதவிகேட்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
தமிழ் மீது ஆறாத பற்றுக் கொண்டதால் தான் பொறியியல் படிக்கும் தனது விருப்பத்தை மாற்றிக் கொண்டு பிளஸ்ஒன்னிலேயே சிறப்புத் தமிழை எடுத்தார் விஜயலட்சுமி.
சிறந்த தமிழாசிரியையாக உருவாவதே தனது லட்சியம் என்று கூறும் அந்த சின்னப் பெண்ணின் கண்ணில் மின்னும்அந்த லட்சியம் கண்டிப்பாக நிறைவேற வேண்டும். அதற்கு நல்ல உள்ளம் கொண்டவர்களின் அன்பும் ஆதரவும்அவசியம்.
இந்த மாணவி குறித்து நாம் ஏற்கனவே வெளியிட்ட செய்தியைப் படித்த தட்ஸ்தமிழின் வாசகர்கள் பலரும் இந்தமாணவிக்கு உதவுவதற்காக இம் மாணவி குறித்த முழு விவரங்களைக் கேட்டுள்ளனர். இதனால் தான் இந்த முழுவிவரத்தையும் அவரது விலாசத்தையும் வெளியிட்டுள்ளோம். உதவ நினைக்கும் கரங்களை வரவேற்கிறோம்.விஜயலட்சுமியின் முகவரி:
M.VIJAYALAKSHMI
D/O MAHADEVAN, PLUMBER,
NEW NO: 51, LAL BEGUM STREET,
CHEPAUK,
CHENNAI - 600 005. INDIA.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications