வார் புக் பார்க்கும் இந்தியா: ஏவுகணைகளை நிறுத்தும் பாக்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

இந்தியாவின் தாக்குல் நிச்சயமாகிவிட்டதாகக் கருதும் பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் ஷகீன் ரக ஏவுகணைகளைநிறுத்தி வருகிறது.

இந்த ஏவுகணைகள் 750 கி.மீ. தூரம் சென்று தாக்கும் திறன் கொண்டவை. அணுகுண்டு போடுவாம் என மிரட்டிவரும் பாகிஸ்தானுக்கு இந்தியாவும் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவிடம் ஹைட்ரஜன் குண்டுகள் உள்பட அனைத்து வகையான அணு குண்டுகளும் தயார் நிலையில் உள்ளனஎன்பது நேற்று வெளிப்படையாகவே பாகிஸ்தானுக்குத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து தனது ஷகீன் ரக ஏவுகணைகளை எல்லையில் நிறுத்த ஆரம்பித்துள்ளது பாகிஸ்தான்.

அதே போல வேறு பணிகளில் ஈடுபட்டுள்ள ராணுவப் படைகளை உடனே எல்லைப் பகுதிக்குச் செல்லுமாறும்பாகிஸ்தான் உத்தரவிட்டுள்ளது. பல்வேறு நாடுகளில் செயல்பட்டு வரும் ஐக்கிய நாடுகள் சபையின் படையில்பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தனது ராணுவத்தினரையும் பாகிஸ்தானுக்குத் திரும்பவும் அந் நாடுஉத்தரவிட்டுள்ளது.

போர் ஆவணங்களை பார்வையிடும் இந்தியா:

இந் நிலையில் வார் புக் எனப்படும் போர் குறித்த ஆவணங்களைப் பார்வையிட்டு தாக்குதலுக்குத் தயாராகுமாறுஇந்திய ராணுவத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

வார் புக் என்பது கடந்த காலத்தில் ராணுவம் போர் குறித்த ரகசிய ஆவணங்கள் அடங்கிய புத்தகம். எதிரி நாட்டுப்படையின் வீக்னஸ், எந்த இடத்தில் முதலில் தாக்கலாம், எங்கு அதிக சேதம் விளையும், நமது படையினரின்குறைபாடுகள், குறைபாடுகளையும் மீறி தாக்குவது எப்படி என்பவை உள்ளிட்ட ரகசிய ஆவணங்கள் இதில்உள்ளன.

ராணுவ உளவுப் பிரிவுகள் கொடுக்கும் முக்கிய தகவல்கள், கடந்த போரில் எதிரி நாடு சந்தித்த வெற்றி-தோல்விகள்,அதற்குக் காரணமாக இருந்த நமது தாக்குதலின் பலம்-பலவீனம் குறித்த விவரங்கள் அடங்கியது இந்த ரகசியபுத்தகம்.

வழக்கமாக போர்க் காலத்தில் தான் இந்தப் புத்தகத்தை ராணுவம் பார்வையிடும்.

இப்போது இந்தப் புத்தகத்தைப் பார்வையிடுமாறு ராணுவத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் பிருத்வி, அக்னி ரக ஏவுகணைகள் ஏற்கனவே தயார் நிலைக்குக் கொண்டு வரப்பட்டு விட்டதாகவும்கூறப்படுகிறது. அவை பாகிஸ்தானின் முக்கிய இலக்குகளை குறி வைத்து நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தெரிகிறது.

எல்லையில் சண்டை:

இந் நிலையில் எல்லை முழுவதும் இந்திய, பாகிஸ்தானியப் படைகள் தொடர்ந்து மோட்டர் பீரங்கிகளால் தாக்குதல்நடத்தி வருகின்றன. கடந்த 3 நாட்களாக தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

இந் நிலையில் பிரதமர் வாஜ்பாயை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்தலைவர் ஹர்கிசன் சிங் சுர்ஜித், எடுத்தவுடன் போருக்குச் சென்றுவிடக் கூடாது. பேசிப் பார்த்துவிட்டு கடைசியாகத்தான் போருக்கு செல்ல வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+