அணு ஆயுத போர் மூளும்: பிரிட்டன் கவலை

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் அணு ஆயுதப் போர் மூளலாம் என இங்கிலாந்து அச்சம்தெரிவித்துள்ளது.

இங்கிலாந்து ராணுவமும், அந் நாட்டு உளவுப் பிரிவும் இந்தியா-பாகிஸ்தான் இடையே அணு ஆயுதப் போர்மூளுவதற்கு முழு வாய்ப்பு உள்ளதாக அந் நாட்டுப் பிரதமரி டோனி பிளேரிடம் தெரிவித்துள்ளன.

இதையடுத்து அந் நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜேக் ஸ்ட்ராவை பிரதமர் டோனி பிளேர் இந்தியா,பாகிஸ்தானுக்கு அனுப்பி வைக்கிறார். அடுத்த வாரம் ஜேக் ஸ்ட்ரா இங்கு வருகை தரவுள்ளார்.

இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் ஏற்படுவது நிச்சயமாகிவிட்டது. இதை உலகமே கவலையோடு பார்த்துவருகிறது. இந்த விஷயத்தில் உடனே தலையிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என ஜேக் ஸ்டராகூறியுள்ளார்.

தீவிரவாதிகளை உடனே கட்டுப்படுத்துமாறு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரபிடம்இங்கிலாந்துப் பிரதமர் டோனிபிளேர் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக அவர்முஷாரபுடன் தொலைபேசியில் பேசி வருகிறார். இந்த விவகாரத்துக்கு பாகிஸ்தான் தான் முக்கியக் காரணம் என்றுஇங்கிலாந்து நினைக்கிறது.

ஜேக் ஸ்ட்ரா இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் தொடர்ந்து பேசி வருகிறார்.

இங்கிலாந்தின் பல பத்திரிக்கைகளும் அணு ஆயுதப் போர் வருவதற்கான சாத்தியம் இருப்பதாக தலைப்புச்செய்திகளை வெளியிட்டுள்ளன.

த டைம்ஸ் நாளிதழ் வெளிட்டுள்ள செய்தி:

இந்தியா முதலில் தீவிரவாத முகாம்களைத் தாக்கும். உடனே பாகிஸ்தான் எதிர்த்துத் தாக்கும். ஆனால்,இந்தியாவின் படை பலத்தை எதிர்கொள்ள முடியாமல் ஓட வேண்டிய நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்படும். அந்தநிலையில் தனது ஆயுதத்தை பாகிஸ்தான் பயன்படுத்தும். பதிலுக்கு இந்தியாவும் அணு ஆயுதங்களால் தாக்கும்.இதில் லட்சக்கணக்கில் உயிர்ச் சேதம் ஏற்படும்.

பாகிஸ்தானிடம் 25 அணு குண்டுகள் உள்ளன. இந்தியாவிடம் 60க்கும் மேற்பட்ட குண்டுகள் உள்ளன என்றுகூறியுள்ளது டைம்ஸ்.

அதே போல அமெரிக்காவும் இந்தப் பகுதியில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்கஆலோசனைப்படியே ஜேக் ஸ்ட்ராவை டோனி பிளேர் அனுப்பி வைப்பதாகத் தெரிகிறது.

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவலும் ஜஸ்வந்த் சிங்குடன் தினமும் பேசி வருவதாகக்கூறப்படுகிறது.

அமெரிக்க அமைச்சர்- இந்திய அதிகாரி சந்திப்பு:

இந் நிலையில் இப்போது அமெரிக்காவில் உள்ள இந்திய பாதுகாப்புத்துறைச் செயலாளர் யோகேந்திர நாராயண்அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் டோனால்ட் ரம்ஸ்பீல்டை சந்தித்துப் பேசினார்.

இந்தியா, அமெரிக்கா இடையே பாதுகாப்புத்துறையில் மேலும் நெருக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பாகஇருவரும் விவாதித்தனர். அதே போல எல்லைப் பதற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

அமெரிக்க முப்படைகளின் கூட்டுத் தலைவர் ரிச்சர்ட் மேயர்ஸ், தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகர் ஸ்டீபன்ஹேட்லியையும் நாராயண் சந்தித்தார்.

இந்தியாவுக்கு வழங்க ஒப்புக் கொண்ட நவீன ஆயுதங்களை உடனே வழங்க வேண்டும் என நாராயண்அமெரிக்காவிடம் வற்புறுத்தினார்.

இதற்கிடையே காஷ்மீரின் மிதவாதத் தலைவர் அப்துல் கனி லோன் கொல்லப்பட்டதற்கு அமெரிக்கா கண்டனம்தெரிவித்துள்ளது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பாவல் கூறுகையில், லோன் கொல்லப்பட்டது கடும் கோபத்தைத்தருகிறது. காஷ்மீரில் அமைதியை விரும்பாத பிரிவினர் தான் இதைச் செய்துள்ளனர் என்றார்.

லோனைக் கொன்றது பாகிஸ்தான் தான் என அவரது மகனே கூறியுள்ளார்.

முஷாரப் ஆலோசனை:

இந் நிலையில் இன்று தனது நாட்டின் பாதுகாப்புக் கமிட்டி மற்றும் அமைச்சரவையின் கூட்டுக் கூட்டத்தைபாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப் கூட்டியுள்ளார்.

மேலும் அரசியல் கட்சித் தலைவர்களையும் அவர் சந்திக்கத் திட்டமிட்டுள்ளார். முஷாரபை சந்தித்த வருமாறுஅரசியல் கட்சிகளுக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

ஆனால், முஷாரப் முதலில் பதவி விலக வேண்டும் என்று அந் நாட்டின் அனைத்து முக்கியக் கட்சிளும்கோரியுள்ளன. இதனால் முக்கியக் கட்சிகள் முஷாரபின் கூட்டத்தைப் புறக்கணிக்கும் என்று தெரிகிறது.

அமெரிக்கா கவலை:

இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டால் தெற்காசிய முழுவதுமே பாதிக்கப்படும் என்பதால் போரை இருநாடுகளும் தவிர்க்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் ஆரி பிஷ்ஷர் கூறுகையில்,

அதிபர் புஷ் இந்தப் போரைத் தவிர்க்க தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க வெளியுறவுத்துறைஇணை அமைச்சர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் விரைவில் இரு நாடுகளுக்கும் செல்வார் என்றார்.

தீவிரவாதத்துக்கு எதிரான போருக்கான அமெரிக்கத் தூதர் பிராங் டெய்லர் கூறுகையில்,

தீவிரவாதிகளை ஒடுக்குவதாக உறுதிமொழி தந்த முஷாரப் அதை செயலில் காட்டியே ஆக வேண்டும்.தீவிரவாதிகளை ஒடுக்க பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரபுக்கு மேலும் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டால்அதை இந்தியா தர வேண்டும்.

இந்தியாவுக்குள் எல்லை தாண்டி தீவிரவாதிகள் செல்லாமல் தடுக்க வேண்டும். அதே நேரம் போரில் ஈடுபடுவதுஇரு நாடுகளுக்கும் நல்லதல்ல. இதனால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்றார்.

இதற்கிடையே பாகிஸ்தானின் பதுங்குக் குழிகளை நேற்றிரவில் இந்தியா தாக்கியதில் 6 பாகிஸ்தான் வீரர்கள்கொல்லப்பட்டனர். பாகிஸ்தான் சுட்டதில் இந்திய கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்தார். 7 பேர் காயமடைந்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+