ஊட்டியிலிருந்து ஜனாதிபதி டெல்லி திரும்பினார்
கோயம்புத்தூர்:
ஊட்டியில் கடந்த 15 நாட்களாக தங்கியிருந்த ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் இன்று டெல்லி திரும்பினார்.
ஊட்டியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கோவை வந்த அவர் இந்திய விமானப் படையின் சிறப்பு விமானத்தில்டெல்லி திரும்பினார்.
அவரை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சங்கர், நலத்துறை அமைச்சர் செம்மலை, மாவட்ட ஆட்சியர்உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அன்புடன் வழியனுப்பி வைத்தனர்.
தனது மனைவி உஷாவுடன் கடந்த 8ம் தேதி நாராயணன் ஊட்டி வந்தார். அவருக்கு டெல்லியில் வந்திருந்த 2ஆயுர்வேத மருத்துவர்களும், கோவையைச் சேர்ந்த இயற்கை மருத்துவமையத்தின் டாக்டர்களும் சிகிச்சை அளித்துவந்தனர்.
அடுத்த குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுக்க நாள் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் மீண்டும் போட்டியிடும்எண்ணம் உள்ளதா இல்லையா என நாராயணன் இதுவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
அனைத்துக் கட்சிகளும் சேர்ந்து ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தால் மீண்டும் குடியரசுத் தலைவராக அவர் தயார்என்று தெரிகிறது. அதைவிட்டுவிட்டு ஆளும் பா.ஜ.க. ஒருவரையும் எதிர்க்கட்சிகள் தன்னையும் நிறுத்தினால்நாராயணன் போட்டியிட மாட்டார் என்று தெரிகிறது.
நாராயணனை மீண்டும் ஜனாதிபதியாக்க தயாராக இல்லை என பா.ஜ.க. தெரிவித்துவிட்டது. ஆனால், கம்யூனிஸ்ட்உள்ளிட்ட எதிர்க் கட்சிகளும் பல்வேறு கட்சிகளில் உள்ள தலித் தலைவர்களும் நாராயணனையே மீண்டும்ஜனாதிபதியாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கிடையே துணை ஜனாதிபதி கிருஷ்ணகாந்தும் ஜனாதிபதியாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர மாநில ஆளுநர் பி.சி.அலெக்சாண்டரை ஜனாதிபதியாக்க பிரதமர் வாஜ்பாய் விரும்புகிறார்.
கடந்த 2 வாரங்களாக ஊட்டியில் நாராயணன் இருந்தபோது அடுத்த ஜனாதிபதி குறித்து டெல்லியில் தீவிர விவாதம்நடத்தப்பட்டது. ஆனால், நாராயணனைப் பொறுத்தவரை எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.
டெல்லி போய்ச் சேர்ந்துள்ள ஜனாதிபதி இன்னும் இரண்டொரு நாட்களில் தனது நிலையை வெளிப்படுத்துவார்என்று தெரிகிறது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications