போருக்கான நேரம் வந்துவிட்டது: வாஜ்பாய் சூளுரை

Subscribe to Oneindia Tamil

குப்வாரா (இந்திய-பாகிஸ்தான் எல்லை):

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை எதிர்த்து கடும் போர் புரிய வேண்டிய நேரம் வந்துவிட்டதாக பிரதமர்வாஜ்பாய் கூறினார்.

காஷ்மீரில் குப்வாரா மாவட்டத்தில் இந்திய-பாகிஸ்தான் எல்லையில் நிலை நிறுத்தப்பட்டுள்ள லட்சக்கணக்கானஇந்திய வீரர்கள் மத்தியில் இன்று வாஜ்பாய் பேசினார். இங்கிருந்து 25 கி.மீ. தொலைவில் தான் எல்லைக்கட்டுப்பாட்டுக் கோடு உள்ளது.

வாஜ்பாயின் பேச்சை இந்திய வீரர்கள் கைதட்டியும் உற்சாகக் குரல் எழுப்பியும் வரவேற்றனர். பல நேரங்களில்அவர் தொடர்ந்து பேச முடியாத அளவுக்கு வீரர்களின் தேசப் பற்று கோஷமும் ஆராவாரமும் இருந்தது.

வீரர்களின் வாஜ்பாய் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டு தனது உரையாற்றினார். அவர் கூறியதாவது:

மறைமுகமான போரைத் தொடுத்து வருகிறார்கள். ஆனால், இந்தியாவுக்கு எல்லையில்லாத பொறுமை எல்லாம்கிடையாது. இந்தப் போர் நம் மீது திணிக்கப்படுகிறது. இதில் நமக்கு வெற்றி உறுதி. அதில் யாருக்கும் எந்தசந்தேகமும் வேண்டாம்.

கார்கிலில் இப்போது தான் நமது வீரத்தைக் காட்டினோம். பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டியடித்துஆக்கிரமிக்கப்பட்ட பகுதியை இன்ஜ் விடாமல் திரும்பப் பிடித்தோம்.

நம்மிடம் நேரடியாக மோதி தோற்றுப் போன பாகிஸ்தான் இன்று தீவிரவாதிகளை அனுப்பி மறைமுகப் போர்புரிந்து வருகிறது. தீவிரவாதிகளை அனுப்பி எங்கள் எல்லைகளைக் காக்கும் வீரர்களின் குழந்தைகள், மனைவி,குடும்பங்களை அழித்திருக்கிறார்கள். இதற்கு பாகிஸ்தான் பதில் சொல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கார்கில் போரில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்தியாவின் ஒரு இன்ச் நிலம் கூட கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லஇறந்துபோன தங்கள் வீரர்களின் உடல்கள் கூட அவர்களால் கைப்பற்ற முடியவில்லை. அந்த இறந்த வீரர்களின்உடல்களுக்கு ஈமச் சடங்குககள் செய்த நாடு இந்தியா. அந்தச் செயலால் இறந்த வீரனுடன் எங்களுக்கு எந்தப்பகையும் இல்லை என்பதைக் காட்டினோம். எதிரியையும் மதிக்கத் தெரியும் என்று காட்டினோம். ஆனால், அதைஎங்களது பலவீனமாகக் கருதிவிட்டார்கள் போலும்.

பாகிஸ்தானின் இந்த மறைமுகப் போரை சந்திப்போம். வென்று காட்டுவோம். எங்களுக்கு சவால்விட்டிருக்கிறீர்கள். அந்த சவாலை ஏற்கிறது இந்தியா (வீரர்கள் உணர்ச்சிமயத்தில் தேச உணர்வு கோஷம் எழுப்பிஆராவாரம் செய்தனர்.)

நமக்கு தீமை இழைக்கப்பட்டு வருவதை உலகம் அறிந்திருக்கிறது. இருந்தாலும் அதை வெளிப்படையாக பேசஉலக நாடுகளுக்கு (அமெரிக்காவுக்கு) மனமில்லை. ஆகவே, நம்மை நாம் தான் காத்துக் கொள்ள வேண்டும்.அதற்கு நாங்கள தயார்.

நான் இங்கே (எல்லைக்கு) வந்திருப்பதன் காரணத்தை நமது அன்னிய நாடு உணருகிறதோ இல்லையோ, உலகம்புரிந்து கொள்கிறதோ இல்லையோ அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. இந்த நாளை வரலாறு தனதுபுத்தகத்தில் எழுதும், ஒரு புதிய வெற்றி வரலாற்றை இந்தியா எழுதும்.

கார்கில் போருக்குப் பின் பாகிஸ்தானுக்கு பயம் வந்துவிட்டது. நேரடியாக மோத அந்த நாட்டுக்கு திராணி இல்லை.இந்திய வீரனை நேரில் எதிர் கொள்ள தைரியமில்லை. அதனால் தான் ஜிகாத் (மதப் போர்) என்ற பெயரில்செத்தால் சொர்க்கம் கிடைக்கும், சாமியின் அருள் கிடைக்கும் என் கூறி தீவிரவாதிகளை வாடகைக்கு வாங்கிஅனுப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இதை இத்தனை நாள் பொறுத்ததே தப்பு. இனியும் பொறுக்க முடியாது. விடுதலை பெற்று 54 வருடங்களில்எத்தனையோ தோல்விகளை நம்மிடம் சந்தித்துவிட்டாலும் பாகிஸ்தானுக்கு புத்தி வரவில்லை.

நமது நாட்டின் பகுதியைப் பிடிக்க பார்த்தார்கள், ஜனநாயகத்தைக் குலைக்கப் பார்த்தார்கள், மதச் சண்டையைதூண்டிவிட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஒவ்வொரு முறையும் நம் நாட்டுக்குள்ஊடுருவியபோது நமது வீரர்கள் உயிரைக் கொடுத்து நாட்டைக் காத்தார்கள். பாகிஸ்தானுக்கு திரும்பத் திரும்பபாடம் புகட்டினார்கள்.

இந்தியா அமைதியை விரும்பியது, வளர்ச்சியை விரும்பியது. நோயை, ஏழ்மையை வெல்ல போராடி வருகிறது.

ராணுவ வீரனின் குழந்தை, தாய், அம்மா, தங்கையைக் கொல்வது எந்த வகையான ஜிகாத் அது? எந்தப் போரில்குழந்தையும், பெண்களும் குறி வைக்கப்பட்டு அழிக்கப்பட்டார்கள்? தங்கள் குழந்தைகளை, குடும்பத்தைவிட்டுவிட்டு நாடு காக்க எல்லையில் நிற்கும் வீரனின் குடும்பத்தை அழித்திருக்கிறீர்கள்.

பாகிஸ்தானின் சவாலை ஏற்கிறேன். இந்தப் போரையும் இந்தியா வென்று காட்டும். எங்கள் வீரர்கள் எந்தத்தியாகமும் செய்து தாய் நாட்டை காப்பாற்றுவார்கள் என்றார்.

வாஜ்பாயின் பேச்சு அங்கு கூடிருந்த வீரர்கள் இடையே பெரும் உணர்ச்சிமயத்தை ஏற்படுத்தியது. வாஜ்பாய் பேசிமுடித்தபின் அவர்களின் ஆராவாரம் அடங்க வெகு நேரமானது. ஜவான்களுடன் ராணுவ அதிகாரிகளும் சேர்ந்துஉற்சாகக் குரல் எழுப்பினார்கள்.

எதற்கு தயாராக இருங்கள்:

அடுத்துப் பேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ், நான் முன்பு இங்கு வந்தபோதும் என்னிடம்நீங்கள் ஒன்றைத் தான் கேட்டீர்கள். எங்களுக்கு எப்போது தாக்குதல் நடத்த உத்தரவிடுவீர்கள் என்று கேள்விஎழுப்பினீர்கள். இப்போதும் என்னிடம் அதைத் தான் கேட்டார்கள் பல வீரர்கள்.

அரசு என்ன முடிவை வேண்டுமானாலும் எடுக்கும். எதற்கும் நீங்கள் தயாராக இருங்கள். தீவிரவாதத்தைஅடியோடு ஒழித்துக் கட்ட தயாராகுங்கள் என்பதை மட்டும் கூறிக் கொள்கிறேன்.

உங்கள் சார்பில் பிரதமருக்கு ஒன்றை மட்டும் கூறிக் கொள்கிறேன். எங்கள் வீரர்கள் முழு உத்வேகத்தில்இருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்யச் சொன்னாலும் அதைச் செய்து காட்ட நாங்கள் தயார் என்றார்பெர்னாண்டஸ்.

பெர்னாண்டசின் இந்தப் பேச்சை லட்சக்கணக்கான வீரர்களும் கரகோஷம் எழுப்பி வரவேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+