சென்னையில் ரூ.7 லட்சம் மதிப்பு போதை ஊசிகள் பறிமுதல்: 2 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை அருகே போலீசார் நடத்திய திடீர் சோதனையில் ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்குக் கடத்தப்பட்டுக்கொண்டிருந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள போதை ஊசிகள் மற்றும் மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திராவிலிருந்து தமிழகத்திற்கு போதை ஊசிகள் கடத்தப்படுவதாகப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.
இதையடுத்து சென்னையை அடுத்த பொன்னேரியில் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர்.ஆந்திராவிலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் போலீசார் தீவிரமாகச் சோதனை செய்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஒரு லாரியில் ஏராளமான போதை ஊசிகளும் மருந்துகளும் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது.
அவற்றை உடனடியாகப் பறிமுதல் செய்த போலீசார், லாரி டிரைவரையும் மற்றொருவரையும் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட போதை ஊசிகள் மற்றும் மருந்துகளின் மதிப்பு ரூ.7 லட்சம் என்று தெரிய வந்துள்ளது.












Click it and Unblock the Notifications