கோட்டையில் விஷம் குடித்தவர் பரிதாப சாவு
சென்னை:
சென்னையில் தலைமைச் செயலகம் அமைந்துள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் சமீபத்தில் விஷம் குடித்தசென்னையச் சேர்ந்த டெய்லர் பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த அசோக்குமார் என்ற டெய்லர் சில நாட்களுக்கு முன்பு கோட்டைக்கு விஷபாட்டிலுடன் வந்தார். அங்கு விஷம் குடித்தார். உடனடியாக அவரை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுசென்றனர்.
அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் நேற்று (வெள்ளிக்கிழமை) சிகிச்சை பலனின்றி அசோக்குமார்பரிதாபமாக இறந்தார்.
தனது குடும்பம் வறுமையில் வாடுவதாகவும் தனக்கு தையல் இயந்திரம் மற்றும் ரூ.10,000 கடனுதவி செய்யுமாறும்கோரி முதல்வர் ஜெயலலிதாவின் அலுவலகத்தில் சில வாரங்களுக்கு முன்பு அசோக்குமார் மனு கொடுத்திருந்தார்.
ஆனால் அதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தால் தான் அவர் கோட்டை வளாகத்தில்வந்து விஷம் குடித்தார்.
கடந்த மார்ச் 27ம் தேதி கோயம்புத்தூரைச் சேர்ந்த வேலு-நளினி தம்பதியர் தலைமைச் செயலகத்திற்கு வந்துமுதல்வரை நேரில் சந்தித்து மனு கொடுக்க முடியாத சோகத்தில் விஷம் குடித்து உயிரிழந்தனர்.
இந்நிலையில் விஷம் குடித்த அசோக் குமாரும் இறந்து போனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications