இதற்கெல்லாம் பயந்து விட மாட்டோம்: இந்தியா
டெல்லி:
தற்போது நடந்து வரும் ஏவுகணைச் சோதனையெல்லாம் வழக்கமான ஒன்று தான் என்று பாகிஸ்தான் கூறுவதுசுத்தப் பொய் என்று இந்தியா கூறியுள்ளது.
இந்தியா உள்ளிட்ட அனைத்து அண்டை நாடுகளிடமும் முன் கூட்டியே தெரிவித்து விட்டு, இன்று ஏவுகணைச்சோதனையைப் பாகிஸ்தான் தொடங்கியது.
இன்று காலை கோரி என்ற ஏவுகணையை ஏவிப் பரிசோதித்த பாகிஸ்தான், வரும் 28ம் தேதி வரை சிறியஏவுகணைகள் முதல் இலகு ரக ஏவுகணைகளை சோதிக்கவிருப்பதாகக் கூறியுள்ளது.
வழக்கமாக நடக்கும் சோதனை தான் இது என்று பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால் இதை இந்தியா வன்மையாகமறுத்துள்ளது.
ஏவுகணைச் சோதனை வழக்கமாக நடைபெறும் ஒன்று தான் என்று பாகிஸ்தான் கூறுவதெல்லாம் சுத்தப் பொய்என்று இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நிருபமா ராவ் இன்று கூறினார். அவர் மேலும்கூறியதாவது:
வழக்கமான ஒன்று என்றால் இவ்வளவு நாளும் இந்தச் சோதனையை நடத்தாமல் தற்போது எல்லையில் பதற்றம்அதிகரித்துள்ள நிலையில் ஏன் நடத்த வேண்டும்?
பாகிஸ்தான் மக்களை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காகத் தான் இந்த ஏவுகணைச் சோதனைகளைஅந்நாடு நடத்தி வருகிறது. இதனால் இந்தியா ஒன்றும் பயந்து விடப் போவதில்லை.
எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக இந்தியா இதுவரை பேச்சுவார்த்தையைத் தான் ஆயுதமாகப்பயன்படுத்தி வந்துள்ளது. ஆனால் பாகிஸ்தானோ தொடர்ந்து எல்லை வழியாக இந்தியாவுக்குள் தீவிரவாதிகளைஅனுப்பி பயங்கரவாதத்தைத் தூண்டி விட்டுக் கொண்டே உள்ளது.
அந்நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்திற்கு இந்தியா தக்க பதிலடி கொடுக்கும் என்பதிலும் சந்தேகமேஇல்லை என்றும் நிருபமா கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்புத்துறை வட்டாரங்களும் இதே கருத்துக்களையே பிரதிபலித்தன.
ஒன்றும் சீரியஸ் இல்லை - வாஜ்பாய்:
இதற்கிடையே பாகிஸ்தான் ஏவுகணைச் சோதனையை இந்தியா அவ்வளவு சீரியசாக எடுத்துக் கொள்ளவில்லைஎன்று பிரதமர் வாஜ்பாய் இன்று கூறினார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மணாலியில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் வாஜ்பாய் இவ்வாறு தெரிவித்தார்.
ஓய்வுக்காக அவர் மணாலி சென்றுவிட்ட போதிலும், எல்லை பதற்றம் குறித்தே வாஜ்பாய் தன்னுடைய முழுகவனத்தையும் செலுத்தி வருகிறார்.
அவரைச் சந்திப்பதற்காக பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் தேசிய பாதுகாப்புஆலோசகர் பிரஜேஷ் மிஷ்ரா ஆகியோர் மணாலி விரைந்துள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications