ஏவுகணை செலுத்தியது பாகிஸ்தான்

Subscribe to Oneindia Tamil

இஸ்லாமாபாத்:

கோரி ரக ஏவுகணையை பாகிஸ்தான் இன்று செலுத்தியது.

இந்திய-பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் பாகிஸ்தானின் இந்தச் செயல் நிலைமையைஇன்னும் மோசமாக்கும் என்று தெரிகிறது.

ஏவுகணைச் சோதனை நடத்தப் போவதாக நேற்றே பாகிஸ்தான் அறிவித்திருந்தது. இந் நிலையில் இன்று காலைகோரி என்ற ஹத்ப்-5 ரக ஏவுகணை செலுத்தி சோதனை செய்து பார்க்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசுஅறிவித்துள்ளது.

ஏற்கனவே இரு நாடுகளும் எல்லையில் எவுகணைகளைக் குவித்துள்ள நிலையில் இந்தச் சோதனை நடந்துள்ளது.

வடக்கு பாகிஸ்தானில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் ஏவுகணைகளை வடிவமைப்பதில்சீனா பெருமளவில் உதவி வருவது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பாகிஸ்தான் ராணுவ அதிகாரி கூறுகையில்,

கோரி ஏவுகணை தான் சோதனை செய்யப்பட்டது. இச் சோதனையில் கிடைத்த விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டுவருகின்றன. இந்த ஏவுகணை மிகத் துல்லியமாக எதிரி இலக்கை தாக்கவல்லது. கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல்மாதத்துக்குப் பின் இப்போது தான் இந்த ஏவுகணை சோதிக்கப்பட்டுள்ளது. இந்த வாரம் முழுவதும் தொடர்ந்துஏவுகணை சோதனை நடக்கும். இது குறித்து இந்தியாவிடம் தெரிவித்துவிட்டோம் என்றார்.

அமெரிக்கா கண்டனம்:

எல்லையில் கடும் பதற்றம் நிலவி வரும்போது பாகிஸ்தான் ஏவுகணை சோதனை நடத்தி வருவது அதிருப்தியைஏற்படுத்தியுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது. வெளியுவுத்துறை செய்தித் தொடர்பாளர் பிலிப் ரீக்கர் கூறுகையில்,

எல்லையில் அணு ஆயுதங்கள் தாங்கிய ஏவுகணைகளை நிறுத்துவது போன்ற செயல்களை இரு நாடுகளும் உடனேகைவிட வேண்டும் என்றார்.

இந்தியா-பாக் செல்ல வேண்டாம்:

இந் நிலையில் எந்த நேரமும் இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் வெடிக்கும் சூழ்நிலை இருப்பதால் இருநாடுகளுக்கும் இப்போதைக்கு யாரும் பயணம் செய்ய வேண்டாம் என அமெரிக்கர்களுக்கு அந் நாடுஅறிவுறுத்தியுள்ளது.

அமெரிக்க வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலைமைபடுமோசமாகியுள்ளது. எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம்.

இதனால் இந்த இரு நாடுகளிலும் உள்ள அமெரிக்கர்களும் உடனே நாடு திரும்பிவிடுவது நல்லது. இந்தியாவில்குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், காஷ்மீர் ஆகிய இடங்களுக்கு அமெரிக்கர்கள் செல்ல வேண்டாம்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகளாலும் அமெரிக்கர்களுக்கு பிரச்சனை வரலாம். எனவே, அங்கிருந்துவெளியேறிவிடவும் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

இந் நிலையில் நேற்று பி.பி.சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப் கூறுகையில்,எல்லையில் இருந்து எங்கள் படைகளை விலக்கிக் கொண்டால் எங்கள் நாட்டின் ஒரு பகுதியையே இந்தியாவிடம்இழக்க வேண்டி வரும். இதனால் தான் படைகளை குவித்து வைத்துள்ளோம் என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+