இந்தியாவை குறை கூறுவதா?: ரஷ்யா கோபம்
மாஸ்கோ:
இந்தியாவுக்குள் தீவிரவாதிகளை அனுப்புவதை பாகிஸ்தான் உடனே நிறுத்த வேண்டும் என ரஷ்யா நேரடியாகவேகூறியுள்ளது.
இப்போது தெற்காசியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலைக்கு பாகிஸ்தான் தான் காரணம் எனவும் ரஷ்யாகுற்றம்சாட்டியுள்ளது.
இப்போது ரஷ்யாவில் உள்ள அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல்இருவரும் எல்லை பதற்றத்துக்கு பாகிஸ்தானோடு சேர்த்து இந்தியாவையும் குறை கூறினர்.
இதையடுத்து உடனே ரஷ்யா தனது நிலையைத் தெளிவுபடுத்தி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. ரஷ்யவெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவைக் குறை கூறுவது தவறு என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷை வைத்துக் கொண்டே இந்தியாவுக்கு தனது முழு ஆதரவைரஷ்யா தெரிவித்துள்ளது இந்திய அரசு வட்டாரங்களில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்லது.
நேற்று காலின் பாவல் ரஷ்ய நிருபர்களிடம் பேசுகையில், இந்தியாவையும் சேர்த்து குறை கூறினார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் ரஷ்யா வெளியிட்டுள்ள அறிக்கையில்,
ஒரு நாட்டின் பாதுகாப்பை இன்னொரு நாடு கேலிக்குறியாக்கும்போது அந்த நாட்டை கண்டிக்காமல் விடக்கூடாது. இந் நிலையில் இந்தியாவின் நிலை எங்களுக்கு நன்றாகவே புரிகிறது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னதாக ஜார்ஜ் புஷ்சும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினும் இந்திய- பாகிஸ்தான் பதற்றம் குறித்தும்விவாதித்தனர். அப்போது பாகிஸ்தானை கட்டுப்படுத்த அமெரிக்காவிடம் புடின் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.
இந்தியாவை பாகிஸ்தான் போன்ற ஒரு நாட்டுடன் சமன்படுத்தி பேசுவதை ஏற்க முடியாது என புடின்கூறியதாகவும் ரஷ்ய வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காஷ்மீருக்கு சுதந்திரம் என்ற பெயரில் தீவிரவாதிகளை உருவாக்கி இந்தியாவுக்குள் அனுப்புவது, செசன்யதீவிரவாதிகளுக்கு ஆதரவு தருவது, அல்-காய்தா கும்பலுக்கு உதவுவது என பாகிஸ்தான் செய்த எல்லாசெயல்களையும் புடின் சுட்டிக் காட்டினார்.
மேலும் இப்போது பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரில் இருந்து வரும் தீவிரவாதிகளால் தான் போர்ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை பாகிஸ்தான் அடக்கினால் என்ன? இந்தக் கும்பல்களுக்கும்அல்-காய்தாவுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது. முதலில் பாகிஸ்தான் அதை ஒப்புக் கொள்ள வேண்டும்எனவும் ரஷ்ய வெளியுறவுத்துறையின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா-சீனா அமைச்சர் பேச்சு:
இதற்கிடையே எல்லை நிலவரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜஸ்வந்த் சிங்குடன் சீனவெளியுறவுத்துறை அமைச்சர் தாங் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
இரு நாடுகளுக்கும் இடையே மோதல் வெடித்தால் ஆசிய கண்டமே பாதிக்கப்படும் என சீன அமைச்சர்கூறியதாகத் தெரிகிறது. இந்தியா மிக வேகமாக முன்னேறி வரும் நாடு. இதை போர் பாதித்துவிடக் கூடாது.எனவே, இந்தியா இந்த விஷயத்தில் கொஞ்சம் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் சீன அமைச்சர் கூறினார்.
-
பங்குச்சந்தை வீழ்ச்சி அடையப்போகிறது! தங்கம், வெள்ளி விலை பல மடங்கு உயரும்.. பிரபல எக்ஸ்பர்ட் -
அழகிரி தந்த கிரீன் சிக்னல்.. தவெகவில் இணைகிறார் அழகிரியின் மகள் கயல்விழி.. விஜய் சொன்ன ஒரு வார்த்தை -
ஆதார் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. இலவசமாக புதுப்பிக்க ஒரு வருடம் கால அவகாசம் நீட்டிப்பு! -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
5 ஆண்டுக்கு ஒருமுறை சம்பள உயர்வு; ₹69,000 அடிப்படைச் சம்பளம்... மத்திய அரசு போடும் ஸ்வீட் பிளான்! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன?












Click it and Unblock the Notifications