மாப்பிள்ளை பார்க்க சென்ற 4 பேர் விபத்தில் சிக்கி பலி
கோபி:
கோபி அருகே மாப்பிள்ளை பார்ப்பதற்காக வேனில் சென்று கொண்டிருந்த 4 பேர் லாரி மோதியதில் பலியாயினர்.மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.
பொம்மநாயக்கன்பாளையத்தில் சிட்டாபாளையத்திற்கு மாப்பிள்ளை பார்ப்பதற்காக மினிவேனில் 30 பேர் சென்றுகொண்டிருந்தனர். ஒத்தக்குதிரை மெயின் ரோட்டில் வேன் சென்று கொண்டிருந்த போது, அங்கே கரும்பு லோடுஏற்றிக் கொண்டு வந்த லாரி இந்த மினிவேனுடன் பயங்கரமாக மோதியது.
இதில் சிவகாமி (30), மல்லிகா (32), பழனிச்சாமி (32) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். முருகன்(33) என்பவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லும் வழியில் உயிரிழந்தார்.
இவர்களைத் தவிர போடி (35), பழனி (37), அப்பியான் (37), சாந்தாள்(50), ரங்கன் (53), சீரான் (55) ஆகிய ஆறுபேரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் ஆறு பேரும் கோபி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி லாரி டிரைவர் திருமூர்த்தியைகைது செய்தனர்.












Click it and Unblock the Notifications