ஜூன் 30ல் பெங்களூர் தமிழ்ச் சங்கத் தேர்தல்
பெங்களூர்:
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் பெங்களூர் தமிழ்ச் சங்கத் தேர்தல் வரும் ஜூன் 30ம் தேதி நடக்கவுள்ளது.
இதற்கு முன் 2000ம் ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் க. சுப்பிரமணியன்தலைவராகவும் ச.ஜெகநாதன் துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் இராசு. மாறன்செயலாளராகவும், ப. இளவழகன், தி.கோ. கருணாநிதி, வா. கோபிநாத் ஆகியோர் துணைச் செயலாளர்களாகவும்தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
செயற்குழு உறுப்பினர்களாக ஜானகிராமன், இலக்குமி நாராயணன், வேலன், விவேகானந்தன, சண்முகம்,ஜெகநாதன், கோபால் மணி, ராஜாபாதர் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். திருநாவுக்கரசு, கமலநாதன்ஆகியோர் இணைப்பு உறுப்பினர்களாக சேர்ந்தனர்.
இவர்களுடைய பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கானதேர்தல் வரும் ஜூன் மாதம் 30ம் தேதி நடக்கவுள்ளது.
இந்த தேர்தலில் தகுதி பெற்ற புரவலர், வாழ்நாள், வாழ்நாள் தவணை உறுப்பினர் போன்றோர் மட்டுமேவாக்களிக்க முடியும்.
போட்டியிட தகுதி மற்றும் விருப்பமுடையோர் ஜூன் 15ம் தேதி முதல் தமிழ்ச் சங்க அலுவலகத்தில் ரூ.5 கட்டணம்செலுத்தி மனு தாளைப் பெற்றுக் கொள்ளலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் திருத்தம் இருந்தாலோ பிழைகள்இருந்தாலோ ஜூன் 15ம் தேதிக்குள் தெரிவித்துவிட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைவர், துணைத்தலைவர், செயலாளர், நான்கு துணைச் செயலாளர்கள், பொருளாளர், ஒன்பது செயற்குழுஉறுப்பினர்கள் ஆகிய 17 பேரும் இந்த தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தேர்தல் குறித்த அட்டவணைபின்வருமாறு:
ஜூன் 12 - வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள்
ஜூன் 15 - வாக்காளர் பட்டியல் திருத்தம் பெற இறுதி நாள்
ஜூன் 17 - இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நாள்
ஜூன் 18 - வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ள இறுதி நாள்
ஜூன் 19 - வேட்பாளர் பட்டியல் வெளியிடும் நாள்
ஜூன் 21 - வேட்பு மனுக்களை திரும்பப் பெற இறுதி நாள்
ஜூன் 22 - வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியிடும் நாள்
ஜூன் 30 - தேர்தல் நடைபெறும் நாள்
வேட்புமனுக்களை ஜூன் 15ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை தேர்தல் பொறுப்பாளரான டி.விஸ்வேஸ்வரனிடமோ அல்லது அவரால் பரிந்துரைக்கப்பட்டவரிடமோ நேரில் கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். ஒருவர் ஒரு பதவிக்கு மட்டுமே போட்டியிட முடியும்.
உறுப்பினர்கள் தங்கள் வாக்காளர் அட்டையோடு மட்டுமே வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். தேர்தல் தொடர்பானசந்தேகங்களுக்கு, தேர்தல் பொறுப்பாளர் இறுதி முடிவு கூறுவார்.
ஜூன் 30ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் நடைபெற்ற அன்றேவாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்படும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications