சாப்பிட்டதற்கு காசு கேட்ட ஹோட்டல் ஊழியருக்கு "பாலபிஷேகம்"
சென்னை:
சென்னை மயிலாப்பூர் பகுதியில் உள்ள ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு காசு கொடுக்காமல் சென்ற ரவுடிகளைத்தட்டிக் கேட்ட ஹோட்டல் ஊழியர் மீது சம்பந்தப்பட்ட ரவுடிகள் கொதிக்கும் பாலை எடுத்து ஊற்றிவிட்டுத் தப்பினர்.
மயிலாப்பூர் பகுதியில் சாலையோர ஹோட்டல் நடத்தி வருபவர் முகம்மது. இவரது கடைக்கு திங்கள்கிழமை காலைசிலர் சாப்பிட வந்தனர். அவர்கள் அப்பகுதி ரவுடிகள் என்று கூறப்படுகிறது.
அவர்களைப் பார்த்த முகம்மது உட்கார வைத்து சாப்பாடு போட்டார். சாப்பிட்ட பின் அவர்கள் எழுந்து செல்லமுயன்றனர். ஆனால் முகம்மதுவும், கடை ஊழியர் விஜய்யும் அவர்களைத் தடுத்து காசு கொடுத்து விட்டுச்செல்லுங்கள் என்றுள்ளனர்.
இதைக் கேட்ட அந்த கும்பல் ஆத்திரமடைந்தது. கடையில் இருந்த பொருட்களை தூக்கிப் போட்டு உடைத்தது.அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த பாலை எடுத்து அந்த ரவுடிகள் விஜய் மீது ஊற்றினர். இதில் விஜய்படுகாயமடைந்தார். பின்னர் அக்கும்பல் அங்கிருந்து சென்று விட்டது.
உடனடியாக இதுகுறித்து மற்ற வியாபாரிகளுக்குத் தகவல் கொடுத்தார் முகம்மது. அப்பகுதி வியாபாரிகள்அனைவரும் திரண்டு மயிலாப்பூர் காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று உடனடியாக ரவுடிகளைக் கைதுசெய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
அந்த ரவுடிகள் மீது நடவடிக்கை எடுப்பதாகக் கூறிய போலீசார் வியாபாரிகளை சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications