அணுகுண்டுகள் ரெடி: பாக். விஞ்ஞானி மிரட்டல்
இஸ்லாமாபாத்:
போர் வந்தால் அதைச் சமாளிப்பதற்குத் தேவையான அணுகுண்டுகள் பாகிஸ்தானிடம் தயாராக உள்ளன என்றுஅந்நாட்டு விஞ்ஞானியான பர்வேஸ் ஹூட்பாய் கூறியுள்ளார்.
எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருவதையடுத்து பாகிஸ்தான் "மளமள"வென்று அணுகுண்டுகளைத்தயாரித்துக் குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவை பாகிஸ்தானின் கோரி ரக ஏவுகணை உள்ளிட்ட பல ஏவுகணைகளிலும் பொருத்தப்பட்டு விட்டதாகவும்ஹூட்பாய் கூறியுள்ளார்.
இஸ்லாமாபாத்தில் உள்ள காயிதே ஆசம் பல்கலைக்கழகத்தின் அணு இயற்பியல் துறையின் பேராசிரியராகப்பணிபுரிந்து வரும் ஹூட்பாய் இது தொடர்பாக "டைம்ஸ்" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது:
கார்கில் போர் முடிவடைந்த நிலையிலேயே பாகிஸ்தான் இரவு பகலாக அணுகுண்டுகளைத் தயாரிக்கும் பணியில்ஈடுபட்டு வந்தது.
தற்போது நாங்கள் போருக்கு முழு அளவில் தயாராகி விட்டோம். ஏற்கனவே கணக்கிட்டதை விட அதிகமாகவேஎங்களிடம் தற்போது அணு ஆயுதங்கள் தயார் நிலையில் உள்ளன.
பெரும்பாலான அணுகுண்டுகள் ஏவுகணைகளில் பொருத்தப்பட்டும் விட்டன என்றார் ஹூட்பாய்.
அவருடைய பேட்டியின் படி பாகிஸ்தானிடம் எப்படியும் 50 முதல் 100 அணுகுண்டுகள் வரை இருக்கும் என்றுகருதப்படுகிறது.
அணுகுண்டை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட இந்தியாவின் அக்னி ஏவுகணை தற்போது ராணுவத்திடம்ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அக்னி ஏவுகணையில் அணுகுண்டுபொருத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications