தென்னக ரயில்வேயின் வித்தியாசமான ஆடியோ கேசட்
சென்னை:
தமிழ் மற்றும் இந்தி சினிமாக்களில் ரயில் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளைத் தொகுத்து இரண்டு ஆடியோகேசட்டுகளை தென்னக ரயில்வே வெளியிட்டுள்ளது.
இந்திய ரயில்வே தனது 150வது ஆண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. எப்போதுமே வித்தியாசத்தைக் காட்டிவரும் தென்னக ரயில்வே, இவ்விழாவையும் வித்தியாசமான முறையில் கொண்டாட முடிவு செய்தது.
இந்திய சினிமாக்களில் ரயிலில் பாடுவது, சண்டை போடுவது போன்ற காட்சிகள் தவிர்க்க முடியாததாக உள்ளது.ரயில் இடம் பெறாத படமே இல்லை எனும் அளவுக்கு ரயில் காட்சிகள் சினிமாக்களில் முக்கியத்துவம்பெற்றுள்ளன.
இதையடுத்து தமிழ் மற்றும் இந்தி சினிமாப் படங்களில் ரயில் சம்பந்தப்பட்ட பாடல் காட்சிகளைத் தொகுத்துஆடியோ கேசட் வெளியிட தென்னக ரயில்வே முடிவு செய்தது.
இதையடுத்து தமிழ்ப் படங்களில் 14 பாடல்கள், இந்திப் படங்களில் 14 பாடல்களைத் தேர்வு செய்து இரண்டுஆடியோ கேசட்டுக்களைத் தயாரித்தது தென்னக ரயில்வே. தலா ரூ.48 விலையுள்ள இந்த கேசட் வெளியீட்டு விழாசென்னையில் உள்ள தென்னக ரயில்வே தலைமை அலுவலகத்தில் திங்கள்கிழமை நடந்தது.
பிரபல பின்னணிப் பாடகர் உண்ணி கிருஷ்ணன் முதல் கேசட்டை வெளியிட தென்னக ரயில்வேயின் பொதுமேலாளரான ஆனந்த் பெற்றுக் கொண்டார்.
தமிழ்ப் பாடல்களில் "கிழக்கே போகும் ரயில்" படத்தில் வரும் "பூவரசம் பூ பூத்தாச்சு...", "ஜென்டில்மேன்" படத்தில்வரும் "சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலே...", "பச்சை விளக்கு" படத்தில் வரும் "ஒளிமயமான எதிர்காலம்..." உள்ளிட்டபாடல்கள் இந்தக் கேசட்டில் இடம் பெற்றுள்ளன.
உலகிலேயே மிகப் பெரிய ரயில்வேயான இந்திய ரயில்வேயும், உலகிலேயே மிகப் பெரிய திரையுலகமானஇந்தியத் திரையுலகம் பிரிக்க முடியாத நண்பர்கள் என்பதை இந்த கேசட் வெளிப்படுத்துவதாக ஆனந்த்குறிப்பிட்டார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications