எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல்?
சென்னை:
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டு வருகிறது.
கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 10ஆம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடந்தது. சுமார் 6லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவியர் இந்த தேர்வினை எழுதினர். இந்த ஆண்டு கூடுதலாக 50மையங்களில் தேர்வுத்தாள் திருத்தும் பணி நடைபெற்றது.
தேர்வுத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் மாதமே முடிந்து விட்டது. தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்துஅனைத்து பணிகளும் கூட முடிவடைந்து தேர்வு முடிவுகள் மே 25ஆம் தேதி வெளியிடப்படும் என்று அமைச்சர்தம்பிதுரை தெரிவித்தார்.
ஆனால் மே 28ம் தேதி ஆகியும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் வெளியாவது குறித்து இன்னும் எந்தவிதசெய்தியும் வெளி வரவில்லை.
மே 29 அல்லது 30ம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் கூறியதாகவும் நேற்றுசெய்திகள் வெளியாகின. ஆனாலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் பழனிவேலு கூறியதாவது:
அரசு விவர தொகுப்பில் தேர்வு பணிகள் முடிந்து விட்டதாக கூறினால் தான், தேர்வு முடிவுகள் வெளியாகும்தேதியை நிர்ணயிக்க முடியும்.
அரசு விவர தொகுப்பு இதுவரை எதுவும் கூறவில்லை. எனவே, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு முடிவுகள் எப்போதுவெளியாகும் என்று என்னால் கூற இயலாது என்று கூறினார் பழனிவேலு.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications