ஓடும் மினி பஸ்சில் "குவா குவா"
தஞ்சாவூர்:
கும்பகோணம் அருகே ஓடும் மினிபஸ்சில் ஒரு பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது.
கும்பகோணம் அருகே உள்ள புளியம்பாடி காலனியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரின் மனைவி ரதி (25).இவர்களுக்கு ஏற்கனவே மூன்று பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் மீண்டும் ரதி கர்ப்பமானார்.
ரதிக்கு பிரசவ வலி எடுத்தவுடன், அவரைக் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்க அவரது குடும்பத்தினர்முடிவு செய்தனர்.
இதையடுத்து, அவர்கள் புளியம்பாடியிலிருந்து கும்பகோணத்திற்கு ஒரு மினிபஸ்சில் சென்றனர்.
ஆனால் அந்த மினி பஸ்சில் போய்க் கொண்டிருக்கும் போதே ரதிக்கு பிரசவ வலி அதிகமானது. பஸ்சில் பயணம்செய்த பெண் பயணிகள் ரதியைப் பாதுகாப்புடன் சூழ்ந்து நிற்க அவர் ஒரு அழகான ஆண் குழந்தையைபெற்றெடுத்தார்.
இதன் பின்னர் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் ரதியும் குழந்தையும் சேர்க்கப்பட்டனர். தாயும் சேயும்தற்போது நலமாக உள்ளனர்.
ஆட்டோவில் பிரசவம்
இதற்கிடையே தஞ்சை மேலவீதியைச் சேர்ந்த ஒரு பெண் ஆட்டோவிலேயே குழந்தை பெற்றார்.
நிறைமாத கர்ப்பிணியான அந்தப் பெண்ணுக்கு திடீரென்று பிரசவ வலி ஏற்படவே தஞ்சையில் உள்ள ராஜாமிராசுதார் மருத்துவமனைக்கு அவர் ஆட்டோவில் கொண்டு செல்லப்பட்டார்.
அந்த தெற்கு வீதியில் சென்று கொண்டிருந்தபோது, அந்த பெண்ணிற்கு ஆட்டோவிலேயே குழந்தை பிறந்தது.
அதன் பிறகு அந்த பெண்ணும் குழந்தையும் ராஜா மிராசுதார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications