மேட்டூர் அணையில் நீர் திறக்க அதிகாரிகள் மறுப்பு: விவசாயிகள் கொதிப்பு
மேட்டூர்:
வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறந்து விடுவதைப் போல் இந்த ஆண்டு மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்துவிடப்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குறுவை சாகுபடிக்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறந்து விடப்படுவது வழக்கம்.
ஆனால் தற்போது 39 அடி தண்ணீர் மட்டுமே இருப்பதால் இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்காக தண்ணீரைத் திறந்துவிட மாட்டோம் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறிவிட்டனர்.
தற்போதுள்ள 11 டி.எம்.சி. நீரில் ஏழு டி.எம்.சி. தண்ணீரை மட்டுமே எங்களால் திறந்து விட முடியும். ஆனால்குறுவை சாகுபடிக்கு 90 டி.எம்.சி. தண்ணீர் தேவை. அதனால் தான் இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்போவதில்லை என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த ஆண்டு இதே சமயம் கிட்டத்தட்ட 100 அடி வரை மேட்டூர் அணையில் தண்ணீர் இருந்தது. அதனால் கடந்தஆண்டு ஜூன் 12ம் தேதி வழக்கம் போல தண்ணீர் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு மேட்டூரில் தண்ணீர் திறந்து விடப்படாது என்று அறிவிக்கப்பட்டதை அறிந்து காவிரி டெல்டா பாசனவிவசாயிகள் மிகவும் கவலை அடைந்துள்ளனர்.
குறுவையில் விளைந்துள்ள பயிர்களை சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு மே 31ம் தேதி வரை வந்து சேர வேண்டிய 205 டி.எம்.சி. தண்ணீரை கர்நாடக அரசு இன்னும்காவிரியில் திறந்து விடவில்லை என்று தமிழகப் பொதுப்பணித்துறை அமைச்சரும் முன்னாள் முதல்வருமானபன்னீர்செல்வம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications