குஜராத் பஸ்களில் குண்டுவெடிப்பு: 12 பேர் காயம்
அகமதாபாத்:
அகமதாபாத் நகரில் இன்று காலை 10 மணிக்கு 2 பஸ்களிலும் மற்றொரு பொது இடத்திலும் தொடர் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 12 பேர் காயமடைந்தனர்.
மேலும் இரண்டு பஸ்களில் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த 2 குண்டுகள் வெடிப்பதற்கு முன்பே மீட்கப்பட்டுஅழிக்கப்பட்டன.
இன்று காலை சுமார் 10 மணிக்கு அகமதாபாத் நகரின் மையப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மந்திர் ரோட்டில் சென்றுகொண்டிருந்த ஒரு டவுன் பஸ்சில் பயங்கரச் சத்தத்துடன் ஒரு குண்டு வெடித்தது.
அடுத்த சிறிது நேரத்திலேயே வாஸ்னா பகுதியில் சென்று கொண்டிருந்த மற்றொரு பஸ்சிலும் குண்டு வெடித்தது.இதையடுத்து அங்கு பெரும் பீதி நிலவியது. குண்டு வெடிப்பில் 12க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்தப் பீதி மறையும் முன்பே இந்நகரின் குருகுல் பகுதியில் ரோட்டில் மற்றொரு குண்டும் பயங்கரச் சத்தத்துடன்வெடித்தது. இதையடுத்து அகமதாபாத் மக்கள் மேலும் பீதி அடைந்துள்ளனர்.
இன்னும் எங்கெல்லாம் குண்டு வைக்கப்பட்டிருக்கிறதோ என்ற பீதியுடன் மக்கள் பதறிச் சிதறி ஓடினர்.
இதையடுத்து அகமதாபாத்தில் அனைத்து அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டன. பயணிகளை இறக்கிவிடும்படிடிரைவர்கள், கண்டக்டர்களுக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து பயணிகள் அனைவரும் நடுரோட்டில்இறக்கிவிடப்பட்டன.
அனைத்து பஸ்களையும் போலீசாரும் வெடிகுண்டு நிபுணர்களும் சோதனையிட்டனர். இதில் மேலும் இரண்டுபஸ்களில் டிபன் பாக்ஸ்களில் வைக்கப்பட்டிருந்த 2 நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டன.
இந்த மூன்று குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் சுமார் 12 பேர் வரை காயமடைந்துள்ளனர். ஆனால் இதுவரைஉயிரிழப்பு ஏதும் இல்லை. இரண்டு பேரின் நிலைமை மோசமாக உள்ளது.
கடந்த பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தைத் தொடர்ந்து குஜராத் முழுவதும் ஏற்பட்டபயங்கரமான வன்முறைச் சம்பவங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர்.
குஜராத் முதல்வர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு ஆலோசகராக பஞ்சாப் முன்னாள் டி.ஜி.பியான கே.பி.எஸ். கில்நியமிக்கப்பட்டதும் அம்மாநிலத்தில் வன்முறை கட்டுப்படுத்தப்பட்டது.
இதற்கிடையே கடந்த 19ம் தேதி மீண்டும் கோத்ராவிலும் அகமதாபாத்திலும் வன்முறை தலை தூக்கியது.வன்முறைக் கும்பலால் ஒருவர் குத்திக் கொல்லப்பட்டார். மேலும் இருவர் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில்உயிரிழந்தனர்.
ஆனால் மீண்டும் அங்கு வன்முறை கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், இன்று அகமதாபாத் நகரில் நடந்துள்ள இந்தக்குண்டு வெடிப்புச் சம்பவங்கள் பெரும் பரபரப்பையும் பீதியையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தச் சம்பவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பில்லை என போலீசார் கூறுகின்றனர். இந்த குண்டுகளில்ஆர்.டி.எக்ஸ் போன்ற சக்தி வாய்ந்த வெடிபொருள் ஏதும் இல்லை. இவை உள்ளூர் குண்டுகள்.
நேற்று முன் தினம் வன்முறை தொடர்பாக பலரை போலீசார் கைது செய்தனர். இதன் எதிரொலியாகவே இந்தக்குண்டுகள் வைக்கப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications