இடைத் தேர்தல் பிரச்சாரம் முடிந்தது: ஓய்ந்தன மைக் செட்டுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழகத்தில் இடைத் தேர்தல் நடைபெறவுள்ள 3 சட்டசபைத் தொகுதிகளிலும் கடந்த 15 நாட்களாக அனல் பறந்தபிரச்சாரம் இன்று மாலை கொட்டும் மழையுடன் முடிவடைந்தது.

சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் ஆகிய தொகுதிகளில் வரும் 31ம் தேதி(வெள்ளிக்கிழமை) இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையே தான் கடும் போட்டிநிலவுகிறது. திமுக சார்பில் மா. சுப்பிரமணியமும் அதிமுக சார்பில் நடிகர் ராதாரவியும் இங்கு போட்டியிடுகின்றனர்.

ராதாரவிக்காக இம்மாதத் துவக்கத்திலிருந்தே அதிமுகவினர் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டனர். இவருக்காகமுன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பெரும்பாலான அமைச்சர்கள் தெருத் தெருவாக அலைந்து ஓட்டுக்கேட்டதும், கடைசி மூன்று நாட்களில் முதல்வர் ஜெயலலிதா பிரச்சாரம் செய்ததும் தான் "ஹைலைட்".

திமுகவின் கோட்டை என்று கருதப்படும் சைதாப்பேட்டையைத் இந்த முறையும் தக்க வைக்க திமுகவினர் தீவிரபிரச்சாரம் செய்தனர். இங்கு கடந்த இரண்டு நாட்களிலும் அக்கட்சியின் தலைவர் கருணாநிதி நேரடியாகப்பிரச்சாரம் செய்தது திமுகவின் நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

வாணியம்பாடி தொகுதியில் திமுக சார்பாக பிரபல இஸ்லாமியப் பாடகரான நாகூர் ஈ.எம். ஹனீபாபோட்டியிடுகிறார். அதிமுக சார்பில் அக்கட்சியின் விவசாயப் பிரிவு செயலாளரான ஆர். வடிவேலு களத்தில்நிற்கிறார்.

தன்னுடைய எட்டுக் கட்டை குரலில் பாட்டுப் பாடியே இத்தொகுதியில் ஓட்டு சேகரித்த ஹனீபா, இதற்காக இசைக்குழுவினர் அடங்கிய ஒரு வேனை அவர் பிரச்சாரத்திற்காகப் பயன்படுத்தினார்.

கடந்த 21 மற்றும் 22ம் தேதிகளில் வாணியம்பாடி தொகுதியில் கருணாநிதி வந்து பிரச்சாரம் செய்தது தான்ஹனீபாவுக்கும் திமுகவினருக்கும் "பூஸ்ட்". ஆனால் இரவு 10 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்ததாகக் கூறி, ஆம்பூர்போலீசார் கருணாநிதி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வடிவேலுவுக்கு ஆதரவாக ஜெயலலிதா கடந்த 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று நாட்களிலும் வாணியம்பாடியில்அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

இதேபோல் அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக வேட்பாளர் பூவராகமூர்த்திக்கும் பாமக வேட்பாளர் டி.பார்வேந்தனுக்கும்இடையில் தான் பலத்த போட்டி நிலவுகிறது.

இத்தொகுதியிலும் ஜெயலலிதா பிரச்சாரம் செய்த நிலையில், கருணாநிதியும் பாமக நிறுவனர் ராமதாசும் இங்குகூட்டாகப் பிரச்சாரம் செய்து பார்வேந்தனுக்கு ஓட்டு சேகரித்தனர்.

இந்தக் கட்சிகள் தவிர மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், இந்திய தேசிய லீக் உள்ளிட்ட பல கட்சிகளும்இந்த இடைத் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மதிமுக பொதுச் செயலாளரான வைகோவும் தங்கள் கட்சிவேட்பாளர்களுக்கு ஆதரவாகத் தீவிரப் பிரச்சாரம் செய்தார். மூன்று தொகுதிகளிலும் நடையாய் நடந்தார்.

காங்கிரஸ் கட்சியும் அக்கட்சியுடன் விரைவில் இணையவுள்ள தமாகாவும் இந்த இடைத் தேர்தலில்போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாகஇக்கட்சிகளின் தலைவர்களான இளங்கோவனும் ஜி.கே. வாசனும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

இவ்வாறு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக இந்த மூன்று தொகுதிகளிலும் அனல் பறந்த தேர்தல் பிரச்சாரம் இன்றுமாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

இதையடுத்து இவ்வளவு நாட்களும் அல்லோலகல்லோலப்பட்ட இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போது படுஅமைதி திரும்ப ஆரம்பித்துள்ளது.

வரும் 31ம் தேதி இந்தத் தொகுதிகளில் தேர்தல் நடக்கவுள்ளது. காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில்உள்ளதாகவும் தமிழக தலைமைத் தேர்தல் கமிஷனர் மிருத்யுஞ்சய் சாரங்கி தெரிவித்தார்.

சைதாப்பேட்டையில் மத்திய ரிசர்வ் போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது. கள்ள ஓட்டு போடுவதற்காக 20,000போலி வாக்காளர்கள் அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அதே போல வாக்காளர் பட்டியலில் 4,000க்கும் மேற்பட்டவர்களின் பெயர்கள் பலமுறை இடம் பெற்றுள்ளதும்தெரியவந்துள்ளது.

சைதாப்பேட்டை மற்றும் வாணியம்பாடியில் போலி வாக்காளர் பட்டியல் விவகாரம் காரணமாகத் தான் தேர்தலேஒத்தி வைக்கப்பட்டது. ஆண்டிப்பட்டி தொகுதியோடு சேர்ந்து நடந்திருக்க வேண்டிய இந்தத் தேர்தல் போலிவாக்காளர் பட்டியலால் தள்ளிப் போனது.

இப்போது மீண்டும் அதே போலி வாக்காளர்கள் விவகாரத்தோடு தேர்தலை சந்திக்கிறது சைதாப்பேட்டை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+