கோட்டையில் மனு கொடுப்பவர்களுக்கு உதவ மன நல மருத்துவர் குழு ரெடி!
சென்னை:
சென்னைத் தலைமைச் செயலகத்தில் முதல்வர் அலுவலகத்தில் மனு கொடுக்க வருபவர்களுக்கு உதவுவதற்காக 6உளவியல் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சென்னைத் தலைமைச் செயலகம் அமைந்துள்ள கோட்டைக்கு முதல்வரிடம் மனு கொடுப்பதற்காக ஏராளமானோர்வருவது வழக்கம். ஜெயலலிதா முதல்வர் பதவிக்கு வந்த பிறகு ஆயிரக்கணக்கன மக்கள் மனு கொடுப்பதற்காகக்குவியத் தொடங்கினர்.
மனு கொடுத்தவர்களில் பலருக்கு உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டதால் மனம் நொந்து சிலர் தற்கொலைக்குமுயன்றனர். இதுவரை கோட்டை வளாகத்தில் 9 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளனர். அவர்களில்கோயம்புத்தூரைச் சேர்ந்த ஒரு தம்பதியும் சென்னையைச் சேர்ந்த ஒரு டெய்லரும் இறந்தனர்.
தலைமைச் செயலக வளாகத்தில் தற்கொலை முயற்சிகள் அதிகரிப்பதைக் கண்டித்த ஜெயலலிதா இதுபோன்ற மனநிலையில் வருபவர்களுக்கு உதவுவதற்காக மனநல மருத்துவர்கள் குழு நியமிக்கப்பட்டு அவர்கள் மூலம்ஆலோசனையும் வழங்கப்படும் என்று அறிவித்தார்.
ஜெயலலிதா உத்தரவின்படி தற்போது 6 மன நல மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கோட்டைக்கு மனுகொடுக்க வருபவர்களிடமிருந்து மனுக்களை முதல்வரின் செயலாளர் பீலா ராஜேஷ் நேரடியாகப் பெற்றுக்கொள்வார்.
வித்தியாசமாக தெரியும் நபர்கள் மன நல மருத்துவ ஆலோசனைக் குழுவிடம் அனுப்பப்படுவர். மனு கொடுக்கவந்தவருக்கு மருத்துவ ஆலோசனை தேவை என்று கருதப்படும் பட்சத்தில் அவர்கள் குறிப்பிட்டமருத்துவமனைக்கு அனுப்பப்படுவர்.
சில நாட்களுக்கு முன் மனு கொடுக்க வந்த நபர் ஒருவர், ஜெயலலிதா தனக்கு ரூ.5 கோடி நிதியுதவி செய்வதாகவாக்குறுதி அளித்திருந்தார் என்று கூறி மனு ஒன்றைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப் போன்றவர்களுக்கு உதவவே இப்போது மன நல மருத்துவர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications