சென்னை சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்களை இணைக்க ரூ.78 கோடியில் பறக்கும் பாலம்
சென்னை:
சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையங்களை இணைக்க ரூ.78 கோடி செலவில்அமைக்கப்படவுள்ள பறக்கும் பாலம் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில்வே நிலையங்களை இணைக்கும் திட்டத்தைரயில்வே போர்டு தீட்டியது. இது குறித்து தமிழக அரசு பலமுறை மத்திய அரசை வற்புறுத்தியும் மத்திய அரசு செவிசாய்க்கவில்லை. அதனால் இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழகம் வந்த ரயில்வே மத்திய அமைச்சர் நிதீஷ் குமாரிடம் நிருபர்கள் இதுகுறித்துகேட்டபோது இத்தகைய குற்றச்சாட்டை மறுத்தார். மேலும் இத்திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்றும்அவர் கூறினார்.
இதையடுத்து, இந்தத் திட்டத்தை ஆய்வு செய்யும்படி தென்னக ரயில்வேக்கு ரயில்வே போர்டு உத்தரவிட்டது.தென்னக ரயில்வேயும் இந்தத் திட்டத்தை ஆய்வு செய்து அதில் சில மாற்றங்களை செய்துள்ளது.
இப்புதிய திட்டத்தின் படி சென்ட்ரல்-எழும்பூர் ரயில் நிலையங்ள் பறக்கும் பாலம் மூலம் இணைக்கப்படும். இந்தரயில்வே மேம்பாலம் ரூ.78கோடி செலவில் உருவாகும்.
இந்த திட்டத்திற்கு தற்போது தமிழக அரசும் ஆர்வம் காட்டி வருகிறது. பாலம் கட்ட ஆகும் செலவில் பாதியைத்தரவும் தமிழக அரசு முன் வந்துள்ளது.
இந்த பாலம் மத்தியச் சிறை வழியாக அமைக்கப்படுவதால் பாலம் கட்டும் பணியில் தொய்வு ஏற்படும் என்றும்சிறையை வேறு இடத்திற்கு மாற்றினால் தான் பாலம் கட்டும் பணி விரைவில் முடிவடையும் என்றும் கூறப்படுகிறது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications