அணு குண்டால் தாக்குவோம்: பாக். மீண்டும் மிரட்டல்
ஐ.நா. சபை:
இந்தியா மீது அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவோம் என பாகிஸ்தான் நேரடி மிரட்டல் விடுத்துள்ளது.
எக்காரணம் கொண்டும் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என இந்தியா கூறியுள்ளது.
ஆனால், எங்களிடம் அப்படிப்பட்ட கொள்கை ஏதும் இல்லை என்று பாகிஸ்தான் கூறியுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபைக்கான பாகிஸ்தானின் புதிய தூதர் முனீர் அக்ரம் இதைக் கூறினார். ஐ.நா. சபையில்பதவியேற்ற இரண்டாவது நாளில் அவர் நிருபர்களிடம் இவ்வாறு பேசியிருப்பது மற்ற நாடுகளின் தூதர்களுக்குபெரும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் கூறுகையில், எங்களால் இந்தியத் தாக்குதலை சமாளிக்க முடியாவிட்டால் அணு ஆயுதங்களைப்பயன்படுத்துவோம். அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாவிட்டால் எங்களை இந்தியா கொன்று குவித்துவிடும்.அதை அனுமதிக்க மாட்டோம்.
இதனால் முதலில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கையை எல்லாம் நாங்கள் ஏற்கமாட்டோம்.
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டி தாக்கினாலோ, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மீதுதாக்கினாலோ, விமான தாக்குதல் நடத்தினாலோ, பாகிஸ்தானின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில்தாக்கினாலோ அதை நாங்கள் போராகவே கருதுவோம் என்றார்.
முனீர் இந்தப் பேச்சு குறித்து எரிச்சலடைந்துள்ள ஐ.நா. அதிகாரிகள் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கமறுத்துவிட்டனர்.
எல்லை தாண்டிப் போய் தாக்குவோம்:
இதற்கிடையே தனது படையினரிடையே பேசிய பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷாரப்,
எங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் இந்தியாவுக்குள் நுழைந்து தாக்குவோம். இதில் யாருக்கும் சந்தேகமேவேண்டாம் என்றார்.
இந்தியா கருத்து:
ஐ.நா. சபையில் பாகிஸ்தான் பேசியிருப்பதும், முஷாரபின் பேச்சையும் வெத்து வேட்டு பேச்சு என இந்தியாகருத்துத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் தீவிரவாதிகள் பட்டியல்:
இந்தியாவில் தாக்குதலில் ஈடுபட்டுள்ள தீவிராத அமைப்புகளைச் சேர்ந்த 20 பேரை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என இந்தியா கோரி வருகிறது.
இந் நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான 32 தீவிரவாதிகள் இந்தியாவில் இருப்பதாகவும் அவர்களை எங்களிடம்ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தான் கோரிக்கை விடுக்கத் திட்டமிட்டுள்ளது.
இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்கும்போது இந்தப் பட்டியல் இந்தியாவிடம் தரப்படும் எனபாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொய்னுதீன் ஹைதர் கூறினார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications