தமிழகம் முழுவதும் பலத்த மழை
சென்னை:
தமிழகம் முழுவதும் நேற்று நன்றாக மழை பெய்தது. சென்னையிலும் நேற்று பிற்பகல் முதல் பலத்த மழைபெய்துமக்களை மகிழ்வித்தது.
கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் துவங்கிய அன்று தமிழகம் முழுவதும் மழை பெய்து மக்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் நனையச் செய்தது.
ஆனால் அதன் பிறகு வழக்கம் போல் அக்னி நட்சத்திரம் கொளுத்தி எடுத்தது. கோடை வெப்பம் தாங்க முடியாமல்ஊட்டி, கொடைக்கானல் போன்ற கோடை வாசஸ்தலங்களுக்கு மக்கள் படையெடுக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் கடந்த 28ம் தேதியுடன் அக்னி நட்சத்திரம் முடிவடைந்தது. அதற்கு மறுநாளான நேற்றே தமிழகம்முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்தது.
நேற்று சென்னையிலும் நன்றாக மழை பெய்தது. அக்னி நட்சத்திர வெயிலால் வாடிக்கொண்டிருந்த சென்னைமக்கள் இந்த மழையால் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.
அக்னி நட்சத்திரத்தின் போது கடந்த 11ஆம் தேதி சென்னையில் அதிகபட்சமாக 111 டிகிரி பாரன்ஹீட் வெப்பம்பதிவானது.
அக்னி நட்சத்திரம் முடிந்துவிட்டால் வெயிலின் கொடூரம் குறைந்துவிடும் என்று வானிலை ஆராய்ச்சியாளர்கள்தெரிவித்திருந்தனர். ஆனாலும், நேற்றும் 104 டிகிரி வெப்பத்தால் மக்கள் வதைபட்டனர்.
இந்நிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் திடீரென மேகம் திரண்டு இடி மின்னலுடன் நல்ல மழை பெய்தது.இம்மழை சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது.
இந்த மழையால் சென்னை நகரின் பல சாலைகளிலும் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது.
வெயிலால் வாடிய மக்களுக்கு இந்த மழை பெரும் சந்தோஷத்தை அளித்தது. நகரில் அனல் காற்றின் வீரியம்குறைந்து குளிர்ந்த காற்று வீசி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
சென்னை நகரில் வானம் தொடர்ந்து மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில்அடுத்த இரு நாட்களுக்கு இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications