நாளை வாக்கு எண்ணிக்கை: 12 மணிக்குள் முடிவு தெரியும்
சென்னை:
நேற்று நடந்த தமிழக சட்டசபை இடைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நாளை (ஞாயிற்றுக்கிழமை)நடைபெறவுள்ளது.
சைதாப்பேட்டை, வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கம் தொகுதிகளில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 5மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது.
ஆங்காங்கே ஏற்பட்ட ஒரு சில வன்முறைச் சம்பவங்களைத் தவிர இந்த இடைத் தேர்தல் அமைதியாகவே நடந்துமுடிந்தது.
தேர்தல் முடிந்ததும் ஓட்டுக்கள் பதிவான மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் சீலிடப்பட்டு பத்திரமாகவைக்கப்பட்டுள்ளன. அவை வைக்கப்பட்டுள்ள இடங்களைச் சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது.
மின் வாக்குப்பதிவு எந்திரங்கள் இந்த இடைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் முதல் சுற்று முடிவுகள்நாளை காலை 9 அல்லது 9.30 மணிக்கெல்லாம் தெரிய ஆரம்பித்து விடும்.
முன்னணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பது குறித்த விவரம் காலை 11 மணிக்குத் தெரிய ஆரம்பிக்கும்.
நண்பகல் 12 மணிக்குள் இந்த மூன்று தொகுதிகளிலும் யார் வெற்றி பெற்றுள்ளார் என்பதும் தெரிந்து விடும்.
சைதாப்பேட்டையில் ராதாரவி (அதிமுக) மற்றும் மா. சுப்பிரமணியன் (திமுக) ஆகிய இருவருக்குமிடையே தான்பலத்த போட்டி நிலவியது.
வாணியம்பாடியில் பிரபல இஸ்லாமிய பின்னணிப் பாடகரான நாகூர் ஈ.எம். ஹனீபா (திமுக) மற்றும் அதிமுகவிவசாயப் பிரிவுச் செயலாளரான ஆர். வடிவேலு (அதிமுக) ஆகியோர் தான் முக்கியப் போட்டியாளர்கள்.
அச்சிறுப்பாக்கத்திலோ அதிமுக சார்பில் போட்டியிடும் பூவராகமூர்த்திக்கும் திமுகவின் கூட்டணிக் கட்சியானபாமக சார்பில் போட்டியிடும் டி. பார்வேந்தனுக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவியது.
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications