சைதாப்பேட்டை வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைப்பு: மேலும் 2 அதிகாரிகள் இன்று விசாரணை
சென்னை:
சைதாப்பேட்டை இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுவிட்டது.
இத் தொகுதியில் நடந்த அதிமுகவினர் முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதால் இங்கு சிலவாக்குச் சாவடிகளில் மட்டும் மறுவாக்குப் பதிவு நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
இங்கு மொத்தம் அமைக்கப்பட்ட 273 வாக்குச் சாவடிகளில் 80ல் பெரும் முறைகேடுகள் நடந்ததாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இங்கு மறுவாக்குப் பதிவு நடத்த வேண்டும் எனவும் கோரியுள்ளது. இதே கோரிக்கையை காங்கிரஸ்,இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட அனைத்து எதிர்க் கட்சிகளும்விடுத்துள்ளன.
இதையடுத்து இங்கு வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சைதாப்பேட்டையில் வாக்குப் பதிவின்போது அதிமுகவினர் செய்ததாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்து மத்தியதேர்தல் பார்வையாளர்கள் நேற்று விசாரணை நடத்தினர். நேற்றே தலைமை தேர்தல் கமிஷனுக்கு அறிக்கையும்அனுப்பி வைத்தனர். அவர்கள் தேர்தல் கமிஷனுக்கு என்ன அறிக்கை அனுப்பினர் என்று தெரியவில்லை.
ஆனால், இவர்களது அறிக்கையால் தேர்தல் கமிஷன் திருப்தியடைவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து வேறுஇரு அதிகாரிகளை மத்திய தேர்தல் கமிஷன் விசாரணைக்காக நியமித்துள்ளது.
இந்த இரு அதிகாரிகளும் இன்று சைதாப்பேட்டை தொகுதி முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி தேர்தல்கமிஷனுக்கு அறிக்கை அனுப்புவர். இதன் பின்னர் தான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து தேர்தல் கமிஷன் முடிவுசெய்யும்.
அதிமுகவினரின் முறைகேடுகள் குறித்து திமுக மிகப் பெரிய போராட்டங்களுக்குத் தயாராகி வருகிறது. டெல்லியில்எம்.பிக்களுடன் எம்.எல்.ஏக்களையும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுத்தத் திட்டமிட்டுள்ளது.
இதே போல தனது பிறந்த நாளைக் கூட கருணாநிதி ரத்து செய்துவிட்டார். அவரும் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவார்என்று கூறப்படுவதால் தேர்தல் கமிஷன் இந்த விவகாரத்தில் அதிக அக்கறை காட்டி வருகிறது.
கவர்னர் ராம்மோகன் ராவ் மூலமாகவும் திமுக தேர்தல் கமிஷனை நிர்பந்தித்துள்ளது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications