எய்ட்ஸ் நோயால் மனமுடைந்து பெண் தற்கொலை
சென்னை:
எய்ட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ஆத்தூர் பெண் ஒருவர் நோயின் தீவிரத்தினால்மனமுடைந்து சென்னை மருத்துவமனை ஒன்றில் தற்கொலை செய்து கொணடார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் காமகாபாளையத்தைச் சேர்ந்த ராமமூர்த்தி என்பவரது மனைவி நிர்மலா (28). இந்ததம்பதிக்கு திருமணமாகி 10ஆண்டுகள் ஆகிவிட்டன. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகன் உண்டு.
சில மாதங்களுக்கு முன்பு நிர்மலா உடல்நலக் குறைவினால் பாதிக்கப்பட்டார். நிர்மலாவை பரிசோதித்தமருத்துவர்கள் இவரை எய்ட்ஸ் நோய் தாக்கியுள்ளதாக கூறினர். இதையடுத்து நிர்மலா அங்கேயே சிகிச்சை பெற்றுவந்தார்.
இந்நிலையில் நோயின் தாக்கம் அதிகரிக்கவே அவர் சென்னை-தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில்சேர்க்கப்பட்டார். கடந்த 20 நாட்களாகவே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது கணவரும்மகனும் உடனிருந்து நிர்மலாவை நன்கு கவனித்துக் கொண்டனர்.
தீவிர சிகிச்சை அளித்தும் உடல் நலத்தில் எவ்வித முன்னற்றமும் இல்லாமல் போகவே, மனமுடைந்த நிலையில்மருத்துவமனை வளாகத்தில் உள்ள மரத்தில் நிர்மலா தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நிர்மலாவின் பிரேதத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அங்கு எய்ட்ஸ் நோயாளிகளின் பிரேதத்தை பரிசோதனை செய்யும் வசதி இல்லாததால், அவரது பிரதேத்தைசென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
நிர்மலாவின் பிரேதத்தை பெற்றுக் கொள்ள அவரது கணவர் மறுத்துவிட்டார். பிறகு, அவரது சகோதரர்கள் அவரதுபிரேதத்தை பெற்றுக் கொண்டனர்.
சமீபத்தில் தான் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் இதே தாம்பரத்தில் உள்ள மருத்துவமனையில் இதுபோலவே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications