வாணியம்பாடி, அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக மாபெரும் வெற்றி
சென்னை:
வாணியம்பாடி மற்றும் அச்சிறுப்பாக்கத்தில் அதிமுக அமோக வெற்றி பெற்றது.
வாணியம்பாடி தொகுதிகளில் அதிமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக பெரும் தோல்வியடைந்தது. அதேபோல அச்சிறுப்பாக்கத்தில் பா.ம.க. மாபெரும் தோல்வியைத் தளுவியது.
வாணியம்பாடியில் அதிமுக வேட்பாளர் வடிவேலு தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் நாகூர்ஹனிபாவை 19,721 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார்.
வாணியம்பாடி வாக்கு விவரம்:
வடிவேலு (அதிமுக)- 63,599
நாகூர் ஹனிபா (திமுக)- 43,878
வாக்கு வித்தியாசம்- 19,721
அதே போல அச்சிறுப்பாக்கத்திலும் அதிமுக வேட்பாளர் பெரும் வெற்றி பெற்றார்.
திமுக கூட்டணி சார்பில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனைஅதிமுக வேட்பாளர் பூவராகமூர்த்தி 17,917 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
அச்சிறுப்பாக்கம் வாக்கு விவரம்:
பூவராகமூர்த்தி (அதிமுக)- 55,507
பார்வேந்தன்- (பா.ம.க)- 37,590
வாக்கு வித்தியாசம்- 17,917
இந்த இரு தொகுதிகளிலும் எதிர்க் கட்சிகளை அதிமுக பெரும் வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது. இந்தத்தொகுதிகளில் பெருமளவில் முறைகேடுகள் ஏதும் நடைபெறவில்லை.
அதிமுகவின் சாதனை:
வாணியம்பாடியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்குப் பின் அதிமுக நேரடியாகப் போட்டியிடுகிறது. வழக்கமாகமுஸ்லீம் லீக் கட்சிகளுக்குத் தான் திராவிடக் கட்சிகள் இந்தத் தொகுதிகளை ஒதுக்கும். ஆனால், இம்முறைநேரடியாகவே போட்டியிட்ட அதிமுக இஸ்லாமியர் அல்லாத வேட்பாளரை நிறுத்தியது.
இப்போது 63,599 வாக்குகள் பெற்றுள்ளதன் மூலம் முஸ்லீம்களின் ஓட்டுக்களையும் அதிமுக வென்றுள்ளதுஉறுதியாகிறது. இங்கு திமுகவின் பிரச்சாரப் பாடகரும் மிகப் பிரபலமான திமுக நிர்வாகிகளில் ஒருவருமான நாகூர்ஹனிபா போட்டியிட்டுத் தோற்றுள்ளது அக் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியைத் தந்துள்ளது.
வன்னியர்களும் கைவிட்ட பா.ம.க.:
அச்சிறுப்பாக்கத்தைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்த பா.ம.க. திணறித்தான் வந்தது. ரிசர்வ் தொகுதியானஇங்கு தலித்கள் அதிகம். அவர்கள் வழக்கமாக அதிமுகவுக்கே வாக்களித்து வந்துள்ளனர். கடந்த தேர்தலில்அதிமுக கூட்டணியுடன் போட்டியிட்டதால் பா.ம.க. வென்றது. ஆனால், இம்முறை திமுகவுடன் சேர்ந்துபோட்டியிட்டு பெரும் தோல்வியடைந்துள்ளது.
தேர்தலுக்குத் தேர்தல் கூட்டணி மாறுவதால் பா.ம.கவின் வாக்கு வங்கியான வன்னியர்கள் கூட அக் கட்சியைஇந்தத் தேர்தலில் புறக்கணித்துள்ளனர் என்பதைத் தான் இந்தத் தேர்தல் முடிவு காட்டுகிறது.
சைதாப்பேட்டை:
சைதாப்பேட்டையின் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் சில வாக்குச்சாவடிகளில் மீண்டும் தேர்தல் நடத்தப்படும் என்று தெரிகிறது. அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடியில் அவ்வளவாககலாட்டாவில் இறங்காத அதிமுக சைதாப்பேட்டையில் கள்ள ஓட்டுகளை அள்ளி அள்ளிப் போட்டது.
அச்சிறுப்பாக்கம், வாணியம்பாடியில் கூட போலி வாக்காளர்களை வெளியூர்களில் இருந்து அதிமுக இறக்குமதிசெய்ததாகவும் திமுக, பா.ம.க. கூறியுள்ளன.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications