தூத்துக்குடி மகளிர் காவல் நிலையத்தில் பெண் கைதி மர்ம சாவு
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் காவல் நிலையத்தில் விசாரணைக்காக வைக்கப்பட்டிருந்த பெண் தூக்குப் போட்டுத் தற்கொலைசெய்து கொண்டார். இதையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி தூவிபுரத்தைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரை சில நாட்களுக்கு முன் நடந்த நகைத் திருட்டு வழக்குஒன்றில் போலீஸார் கைது செய்திருந்தனர். அவரிடம் நடத்திய விசாரணையின்போது நகை திருடியதைமுனியம்மாள் ஒத்துக் கொண்டதாகவும், அவரிடமிருந்து நகைகளைக் கைப்பற்றி விட்டதாகவும் போலீஸ் தரப்பில்கூறப்பட்டது. அதன் பிறகு முனியம்மாள் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டார்.
அங்கு வெள்ளிக்கிழமை இரவு தனது சேலையில் தூக்குப் போட்டு முனியம்மாள் தற்கொலை செய்து கொண்டார்.இதையடுத்து தூத்துக்குடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சுமித் சரண்,ஆர்.டி.ஓ. உள்ளிட்டோர் விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
இதற்கிடையே, தனது தாயாரின் சாவுக்குபோலீஸார்தான் காரணம் என்று முனியம்மாளின் மகன் கணேச மூர்த்திகூறியுள்ளார். அவர் கூறுகையில், என் தாயிடம் அசிங்கமான முறையில் போலீஸார் விசாரணை நடத்தினார்கள்.அவர் கண் முன்பாகவே என்னையும், என் தந்தையையும் அடித்து உதைத்தார்கள். இந்த நிலையில் மகளிர் காவல்நிலையத்திற்குக் கொண்டு சென்று கொன்று விட்டார்கள் என்றார் அவர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
9 ஆண்டு ஐடி மேனேஜராக இருந்த பெண்.. கைநிறைய சம்பளம்.. இப்போ ஆட்டோ ஓட்டுகிறார்.. என்ன நடந்தது?! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications