ராஜ்குமாரை மீட்க 10 கோடி கைமாறியது: தேவாரம்
தர்மபுரி:
கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க அரசிடம் இருந்து ரூ. 10 கோடி கைமாறியதாக அதிரடிப் படையின் தலைவர்தேவாரம் கூறினார்.வீரப்பனைப் பிடிக்க அமைக்கப்பட்டுள்ள சிறப்பு அதிரடிப் படையின் தலைவராக மீண்டும் ஓராண்டு காலத்துக்குநியமிக்கப்பட்டுள்ள தேவாரம் தர்மபுரியில் நிருபர்களை சந்தித்தார்.
அவர் கூறுகையில், 7 ஆண்டுகளுக்கு முன் அவனுடன் 180 பேர் இருந்தனர். ஆனால், இப்போது இந்தஎண்ணிக்கை வீரப்பனையும் சேர்ந்து மூன்றாகிவிட்டது. அதிரடிப் படையினர் எடுத்த தீவிர நடவடிக்கை தான்இதற்குக் காரணம்.
அதிரடிப்படையினரின் எண்ணிக்கையை குறைக்க அரசு முடிவு செய்திருப்பதாக வரும் தகவல்கள் தவறானவை.வீரப்பனை விரைவில் பிடிப்போம். நேற்று கூட வீரப்பனின் முன்னாள் கூட்டாளிகள் 2 பேர் பிடிபட்டனர்.அவர்களிடம் இருந்து நாட்டுத் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
நக்கீரன் நிருபர் சிவசுப்பிரமணியம், கொளத்தூர் மணி ஆகியோரை கைது செய்ததில் எந்தத் தவறும் இல்லை.அவர்கள் மீது எந்த பொய் வழக்கும் போடப்படவில்லை. வீரப்பனுக்கு அவர்கள் உதவியது உண்மை.
ராஜ்குமாரை மீட்க சுமார் 10 கோடி ரூபாய் கைமாறியுள்ளது. யார் யாருக்கு எவ்வளவு போனது என்பதை விசாரித்துவருகிறோம்.
அதிரடிப் படையினர் செய்ததாகக் கூறப்படும் அட்டூழியங்கள் குறித்து சதாசிவம் கமிஷன் என்னை விசாரித்துவருகிறது. இதனால் அதிரடிப் படையின் பணிகள் பாதிக்கப்படாது என்றார் தேவாரம்.
ராஜ்குமாரை கண்டித்து 1 லட்சம் கடிதங்கள்
இதற்கிடையே கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கண்டித்து அவருக்கு 1 லட்சம் கண்டனக் கடிதங்களை அனுப்பப் போவதாக தந்தைபெரியார் திராவிடக் கழகம் அறிவித்துள்ளது.
சந்தனக் கடத்தல் வீரப்பன் பிடியிலிருந்து நடிகர் ராஜ்குமாரை, அப்போதைய தமிழக அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க பழ.நெடுமாறன்தலைமயிலான குழு காட்டுக்குள் சென்று வீரப்பனைப் பார்த்துப் பேசி மீட்டு வந்தது. அந்தக் குழுவில் கொளத்தூர் மணியும் இடம்பெற்றிருந்தார். இப்போது அவரை தமிழக அரசு கைது செய்துள்ளது.
தன்னை மீட்டு வந்த கொளத்தூர் மணி கைது செய்யப்பட்டு 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் அதுகுறித்து கண்டனம் தெரிவிக்காத நடிகர்ராஜ்குமாரைக் கண்டித்து, அவருக்கு 1 லட்சம் கண்டன கடிதம் அனுப்பப் போவதாக தந்தை பெரியார் திராவிடர் கழகம் முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் தலைவர் ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தன்னை மீட்க கொளத்தூர் மணி மேற்கொண்டமுயற்சிகளை முன்பு ராஜ்குமார் பாராட்டியிருந்தார். ஆனால் இப்போது அமைதியாக இருக்கிறார்.
இது மனதுக்கு மிகவும் வேதனை தருகிறது. ராஜ்குமார் தனது அமைதியை உடைக்க வேண்டும். கொளத்தூர் மணிக்கு எதிராகமேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் வன்மையாக கண்டிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications