சைதை: தேர்தல் அதிகாரிகள் விசாரணை முடிந்தது
சென்னை:
சைதாப்பேட்டையில் இடைத் தேர்தலின் போது நடந்த முறைகேடுகள் குறித்து கடந்த 3 நாட்களாக விசாரணைநடத்திய தேர்தல் பார்வையாளர்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் தங்களுடைய அறிக்கையை தலைமைதேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைத்தனர்.
சைதாப்பேட்டை தொகுதி இடைத் தேர்தலில் ஏராளமான தில்லுமுல்லுகள் நடைபெற்றதாக திமுக, பாமக உள்ளிட்டஎதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டி தேர்தல் கமிஷனிடம் புகார் ஒன்றையும் கொடுத்திருந்தனர். இதையடுத்துசைதாப்பேட்டை தொகுதியில் மட்டும் வாக்கு எண்ணிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது.
மேலும் இதுகுறித்து அச்சிறுப்பாக்கம் மற்றும் வாணியம்பாடி தொகுதிகளில் மத்திய தேர்தல் பார்வையாளர்களாகநியமிக்கப்பட்டிருந்த பூர்ஜியா மற்றும் சந்தோஷ் குமார் ஆகியோர் கடந்த ஞாயிற்றுக்கிழமை சைதாப்பேட்டைதேர்தல் முறைகேடுகள் குறித்து விசாரணையைத் தொடங்கினர்.
அத்தொகுதி வேட்பாளர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார், திமுக ஏஜென்டாக இருந்த முன்னாள் திமுகஅமைச்சர் பொன்முடி, திமுகவினர் மற்றும் அதிமுகவினர் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களாக இவ்வதிகாரிகள்விசாரணை நடத்தினர்.
அதிமுக தரப்பில் வக்கீல் ஜோதி உள்ளிட்டோர் கலந்து கொண்டு தங்களது தரப்புக் கருத்துக்களைத் தெரிவித்தனர்.இந்த விசாரணை நள்ளிரவு வரை நீடித்தது. விசாரணைக்குப் பின் நள்ளிரவுக்கு மேல்தான் அதிகாரிகள் வெளியேவந்தனர். ஆனால் நிருபர்களின் கேள்விகளுக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டனர்.
இந்நிலையில் இன்றும் மூன்றாவது நாளாக பூர்ஜியாவும் சந்தோஷ் குமாரும் சென்னை தலைமைச் செயலகத்தில்தங்களுடைய விசாரணையை நடத்தினர்.
நண்பகலுக்குள் தங்களுடைய விசாரணை முழுவதையும் முடித்துக் கொண்ட இந்தத் தேர்தல் அதிகாரிகள், பிற்பகல்சுமார் 1 மணிக்கு தங்களுடைய அறிக்கையை தலைமைத் தேர்தல் கமிஷனுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.
அந்த அறிக்கையின் படி சைதாப்பேட்டை தொகுதியில் மறு தேர்தல் நடத்தப்படுமா அல்லது அங்கு வாக்குஎண்ணிக்கையைத் தொடங்கலாமா என்பது குறித்து இன்று மாலைக்குள் தலைமைத் தேர்தல் கமிஷன் தன்னுடையமுடிவை அறிவிக்கவுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications