இந்திய தூதரக ஊழியருக்கு கொடுமைக்கு மேல் கொடுமை
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தான் உளவுப் பிரிவினரால் தாக்கப்பட்டு கவலைக்கிடமான நிலையில் உள்ள இந்தியத் தூதரக ஊழியரைஇந்தியா கொண்டு செல்ல பாகிஸ்தான் போலீசார் தடை விதித்துள்ளனர். அந்த ஊழியரை ஏற்றிக் கொண்டுபுறப்பட்ட கார் நடுரோட்டில் நிறுத்தப்பட்டுள்ளது.
இச் சம்பவம் இரு நாட்டு உறவுகளை மேலும் மோசமாக்கும் என்று தெரிகிறது.
சமீபத்தில் அலுவலகத்தில் இருந்து தனது வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்த இந்தியத் தூதரகத்தின் ஊழியர்குல்வந்த் சிங் பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐ.எஸ்.ஐயால் கடத்திச் செல்லப்பட்டார். அவர்களால் மிகக்கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் 5 மணி நேரத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டார்.
தாக்குதலில் அவரது இடுப்பு எலும்பு முறிந்துள்ளது. உடல் முழுவதும் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவருக்குஇஸ்லாமாபாத்தில் சிகிச்சை அளிக்கவிடாமல் பாகிஸ்தான் அரசு தடுத்துவிட்டது.
குல்வந்த் சிங்கால் உட்கார முடியாத சூழ்நிலை உள்ளதால் இந்தியாவிலிருந்து ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டது.ஆனால், அதையும் பாகிஸ்தான் தடுத்துவிட்டது.
இதையடுத்து அவரை கார் மூலமாக இந்தியாவுக்குக் கொண்டு வர முடிவு செய்யப்பட்டது. இதற்கான அனுமதியும்பாகிஸ்தான் அரசிடம் பெறப்பட்டது. இன்று காலை குல்வந்த் சிங், அவரது குடும்பத்தினர், மருத்துவர்கள் மற்றும்சில தூதரக ஊழியர்கள் சில கார்களில் இந்தியா புறப்பட்டனர். காரில் படுக்க வைக்கப்பட்டு அழைத்துவரப்பட்டார்.
ஆனால், இந்தக் கார்களை லாகூர் அருகே பாகிஸ்தான் போலீசார் தடுத்துவிட்டனர். இந்த விவரம் உடனடியாகஇந்தியாவுக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் பாகிஸ்தானுடன் பேசி வருகின்றனர்.
குல்வந்த் சிங்கின் கார் பிற்பகல் வரை நடுரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
எல்லையில் குண்டுமழை:
இதற்கிடையே எல்லையில் பாகிஸ்தான் படையினர் தொடர்ந்து இந்தியாவை நோக்கி பீரங்கிகளால் சுட்ட வண்ணம்உள்ளனர். துப்பாகிகள், மார்ட்டர் கனரக துப்பாக்கிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதில் இந்தியப்பகுதியில் சில புதர்களில் தீப் பிடித்துக் கொண்டது. இந்தத் தீ தொடர்ந்து பரவி வருகிறது.
இந்தியாவும் இதற்கு பதிலடித் தாக்குதல் நடத்தி வருகிறது.
பாகிஸ்தானுக்கு ஹிஸ்புல் தீவிரவாதிகள் எதிர்ப்பு:
இந்தியாவில் அப்பாவிகளைக் கொன்று வருவதை ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு கடுமையாக் கண்டித்துள்ளது.இந்தத் தீவிரவாத அமைப்பில் பாகிஸ்தானியர்கள் கிடையாது. இது காஷ்மீரிகளைக் கொண்ட தீவிரவாத அமைப்பு. இந்தஅமைப்புக்கு பாகிஸ்தான் உதவி வருகிறது.
ஆனால், இந்த அமைப்பை சமீபத்தில் தனது முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர பாகிஸ்தான் முயன்றது. இதை எதிர்த்த அதன்கமாண்டரை அமைப்பை விட்டே நீக்கியது. இதைத் தொடர்ந்து பல ஹிஸ்புல் தீவிரவாதிகள் இந்தியாவிடம்சரணடைந்துவிட்டனர்.
இந்த அமைப்பு காஷ்மீரில் அப்பாவி மக்களை பாகிஸ்தான் கொன்று வருவதை கண்டித்துள்ளது. காலுசக்கில் ராணுவத்தினரின்குடும்பத்தினர் கொல்லப்பட்டதை இந்த அமைப்பினர் வெட்கக்கேடாக நினைக்கின்றனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்த லக்ஷர்-ஏ-தொய்வா தீவிரவாத அமைப்பினர் தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாகவும் அந்த அமைப்புகூறியுள்ளது.
ஒன்றும் அறியா அப்பாவி மக்களை கொன்றது வெட்கத்திற்கும் வேதனைக்கும் உரிய செயல் என்று இந்த அமைப்பு கூறியுள்ளது.இந்த அமைப்பின் மன மாற்றம் குறித்து ராணுவ அதிகாரிகள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
இதற்காக இந்த அமைப்பினர் அனைவரும் திருந்திவிட்டதாகக் கூறிவிட முடியாது. இன்று எல்லைப் பாதுகாப்புப்படையினர் மீது தாக்குதல் நடத்திய ஒரு ஹிஸ்புல் தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.இவன் இந்தப் படையின் கமாண்டர் பொறுப்பில் இருந்தவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications