அதிமுகவை எதிர்க்க அனைத்துக் கட்சிகளுக்கும் கருணாநிதி அழைப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சைதாப்பேட்டை இடைத் தேர்தலில் நடந்த முறைகேடுகளைக் கண்டித்து திமுக நடத்தவுள்ள மாநில அளவிலானஆர்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொள்ள வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கைவிடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், இந்தப் போராட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் கலந்து கொண்டு ஜனநாயகப்படுகொலையைக் கண்டிக்க வேண்டும்.

போராட்டத்தை அமைதியாகவும், வெற்றிகரமாகவும் திமுகவினர் நடத்திக் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சைதாப்பேட்டை வன்முறையைக் கண்டித்து நேற்று தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்தார்கருணாநிதி. யாரும் தன்னைச் சந்திக்க வர வேண்டாம் என்று அறிவித்திருந்தார். ஆனால், அதையும் மீறி மாநிலம்முழுவதும் இருந்தும் தொண்டர்கள் குவிந்தனர்.

ஆனால், யாரையும் அவர் சந்திக்கவில்லை. யார் பார்வையிலும் படாமல் இருப்பதற்காக நேற்று அவர் ரகசியஇடத்துக்குச் சென்றுவிட்டார்.

திமுக-பா.ஜ.க. உறவு:

இந் நிலையில் திமுக- பா.ஜ.க. இடையிலான உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்தியஅமைச்சரும் பா.ஜ.க. தேசிய பொதுச் செயலாளர்களில் ஒருவருமான வெங்கைய்யா நாயுடு கூறியுள்ளார்.

சென்னையில் நிருபர்களிடம் பேசிய அவர்,

எம்.எல்.ஏவாக இருப்பவர்கள் உள்ளாட்சிப் பதவிகளில் இருக்க முடியாது என்ற தமிழக அரசின் சட்டம்சிறப்பானது தான். ஆனால், அதை முன் தேதியிட்டு அமலாக்கியதை ஏற்க முடியாது (இதனால் தான் ஸ்டாலின்பதவி இழக்க வேண்டியுள்ளது) என்றார்.

சமீபத்தில் நடந்த இடைத் தேர்தலில் திமுகவுக்கு ஏன் பா.ஜ.க. பிரச்சாரம் செய்யவில்லை என்ற கேள்விக்கு நாயுடுபதிலளிக்க மறுத்துவிட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+